ரூ.300 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி பிரபல கட்சி பொதுச்செயலாளர் ரூ. 5 கோடி மோசடி!

300 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 5 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை தெலுங்கானா போலீசார் காரைக்குடியில் கைது செய்தனர்.

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சேர்ந்தவர் எஸ்.ராஜசேகர். இவர் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளராக உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனிடையே தெலுங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனை வளர்ச்சி பணிக்கு எஸ்.ராஜசேகர் 300 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக லெட்சுமிநாரயணன் என்பவர் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த தெலுங்கானா போலீசார் தமிழகம் விரைந்தனர். இதைதொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்ற தெலுங்கானா போலீசார், எஸ்.ராஜசேகரை கைது செய்தனர். பத்திரிக்கையாளர்களை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறைக்கு சென்றவர் எஸ்.ராஜசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.