பொருள் வாங்குவதாக மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமிகள்!!..

திருநள்ளாறில் பொருள் வாங்குவதாகக் கூறி மூதாட்டியிடம் இருந்து 10பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருள் வாங்குவதாக  மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமிகள்!!..

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தான் லீலாவதி. கிட்டத்தட்ட 62 வயதான லீலாவதி பாட்டி  தன் வீட்டின் வாசலில் பெட்டிக்கடை ஒன்றை வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில்  வந்த 2 நபர்கள் பொருட்கள் வாங்க வந்ததாக கூறியுள்ளனர். உடனே அவர்களிடம் என்ன வேண்டும் என்று லீலாவதி பாட்டி கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் கேட்ட பொருட்களை லீலாவதி எடுத்துக் கொண்டிருந்த போது அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை அந்த ஆசாமிகள் பறித்து சென்றுவிட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத லீலாவதி கத்தி கூச்சலிட்டுள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகனும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வருவதற்குள் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டியிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், பொருட்கள் வாங்குவது போன்று கவனத்தை திசைத்திருப்பி நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.