நம்மை பின் தொடரலாம் ஆனால் நம்மை எதுவும் செய்யமுடியாது: பப்ஜி மதனின் திமிர் பேச்சு

யூடியூபில் ஆபாசமாக பேசி பப்ஜி வீடியோக்களை வெளியிட்ட மதன் மீது போடப்பட்ட குண்டாஸ், செல்லுமா செல்லாதா என்பதை நிரூபிக்க அறிவுரை கழகத்தில் மதன் ஆஜராகியுள்ளார். 

நம்மை பின் தொடரலாம் ஆனால் நம்மை எதுவும் செய்யமுடியாது: பப்ஜி மதனின் திமிர் பேச்சு
யூ-டியூபர் மதன் பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களை பேசியதால், மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்நிலையில் தன்மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் செல்லுமா செல்லாதா என்பதை நிரூபிக்க,  இன்று மதன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 
அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனிடம் அவரின் மனைவி கிருத்திகா நடத்திய உரையாடலை தற்போது வெளியாகியுள்ளது. மனைவி கிருத்திகாவிடம் நீ ஊடகத்தினரிடம் நமது கார்களை சொகுசுக் கார்கள் இல்லை என்று தவறாகக் கூறிவிட்டாய், அது சொகுசுக் கார்கள்தான் என்றார்.
 
மேலும், நமது கார்கள் எங்குள்ளது எனத் தெரியுமா? என மதன் கேட்க, அதற்கு கேள்விக்குறியுடன் பார்த்த மனைவி கிருத்திகாவிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் நமது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அதன் மதிப்பென்ன என்பது பற்றி உனக்கு தெரியுமல்லவா? எனவே அதை நமது வழக்கறிஞர்களிடம் கூறி வெளியில் எடுக்க ஏற்பாடு செய் எனவும் அவர்கள் நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை ஆனால் கொஞ்சம் எதிர்பார்ப்பார்கள் என்று கூறி கிளிப்பிள்ளைபோல் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த கிருந்திகாவிடம் அந்த வேலையை உடனே முடி என்றார் மதன் தோரணையாக.
 

மேலும், இவர்கள் நம்மை பின் தொடரலாம் ஆனால் நம்மை எதுவும் செய்யமுடியாது எனவும் கிருத்திகாவிடம் திமிருடன் கூறிய மதன் எந்த முறையான ஆதாரங்களையும் இவர்களால் அளிக்க முடியாது எனவும் நான் வெளியில் வருவேன், வந்தவுடன் இந்த வழக்கை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து எனக்கு நன்றாகத் தெரியும் துணிச்சலுடன் மனைவியிடம் உரையாடுகிறார் மதன்.
 
மேலும், இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் சமூக வலைதளம் மூலம் நிகழ்த்திய குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில் குண்டாஸ் செல்லாது என நீதிபதி அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி பேசிய மதன் இங்கு இல்லையென்றாலும் 6 மாதம் காத்திரு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு நான் நிச்சயம் வெளியில் வருவேன். அதன் பின் பார்த்துக்கொள்ளலாம் என முழு நம்பிக்கையுடன் மனைவியிடம் கூற செவி மடுத்து அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டார் மனைவி கிருத்திகா.
 
யூ-டியூப் முழுவதும் டிக்-டாக் விடியோக்கள் என ஆபாசங்கள் நிறைந்துள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு பப்ஜி மதனை மட்டும் குறிவைப்பது ஏன்? இந்த பாயிண்டை வைத்து நமது வழக்கறிஞரை பேசச் சொல் என்று மனைவிடம் கூறுகிறார்.
 
மேலும், சில தினங்களுக்கு முன் தன்னிடம் போலீஸார் பேசியதாகவும் அப்போது, 'உன் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரியுமா?' எனக் கேட்டதாகவும் அதற்கு தான் முடிந்தால் குற்றத்தை நிரூபியுங்கள், நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் 10 லட்சம் ரூபாயை அபராதமாக கட்டத் தயார் என்றுக் கூறியதாகவும் மனைவி கிருத்திகாவிடம் கூறுகிறார் மதன்.