வந்த இரண்டே நாளில் பயங்கர சம்பவம் பண்ணிய சைலேந்திர பாபு., பூரித்துப்போன முதல்வர் ஸ்டாலின்.,! 

வந்த இரண்டே நாளில் பயங்கர சம்பவம் பண்ணிய சைலேந்திர பாபு., பூரித்துப்போன முதல்வர் ஸ்டாலின்.,! 

பதவிக்கு வந்து இரண்டே நாட்களில் குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்த சைலேந்திர பாபுவின் முயற்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். 

தமிழகத்தில் குழந்தை கடத்தல் என்பது புதியது அல்ல. பல ஆண்டுகளாகவே குழந்தைகளை கடத்தி விற்பது என்பது தொடர்கதையாகியுள்ளது. அதோடு இது இந்தியா முழுக்க இதற்கு என்று தனி டீமே செயல்பட்டு வந்தது. இது, தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய சிக்கலையும் ஏற்படுத்திவந்தது. இந்நிலையில் தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் அவர் கவனத்திற்கு தொடர்ந்து நடக்கும் குழந்தை கடத்தல் சம்பவம் தெரியவந்துள்ளது. உடனடியாக இதற்கு என்று தனி குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு தொடங்கியது.  

மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சாலையோரம் வசித்து வந்துள்ளார். இவருடைய முதல் கணவர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது கணவர் முருகனுடன்  6 குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை இறந்த நிலையில்,  இரண்டு மற்றும் மூன்றாவதாக பிறந்த குழந்தைகள் காணாமல் போயுள்ளன.நான்காவதாக பிறந்த இரட்டை குழந்தையை சித்ராவின் உறவினர் சுகன்யா - கணேஷ்குமார் தம்பதி வளர்த்து வருகின்றனர். ஐந்தாவதாக பிறந்த குழந்தையை செல்லூர் பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கு சுகன்யா தத்து கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் அனைத்தும் வெளிவந்த நிலையில் குழந்தைகள் நல அதிகாரிகள் 3 குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் குழந்தைகளின் தாயார், தத்து கொடுத்தவர் மற்றும் குழந்தைகளை வளர்த்து வந்த அனைவரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அதில் குற்றம் செய்த அனைவரையும் கைது செய்தனர்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் இருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின், 1 வயது ஆண் குழந்தை ஜூன் 29 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில்  போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் காப்பகத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வேறு காப்பகங்களுக்கு மாற்றும் போது , கர்நாடக மாநிலத்தை சேர்த்த ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தை காணாமல் போனதும் தெரியவந்தது.
 
மேலும், காப்பக பெண் நிர்வாகிகளான கனிமொழி கலைவாணி ஆகிய இருவரிடம் தல்லாகுளம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மதுரை இஸ்மாயில்புரம் 4 வது தெருவை சேர்ந்த 47 வயதுடைய நகைக்கடை உரிமையாளரிடம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை மாணிக்கம் 5 லட்சத்திற்கு விற்கப்பட்டது தெரியவந்தது. மேலும் 2 வயது பெண் குழந்தை கடந்த 16 ம் தேதி கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விறக்கப்பட்டதும் தெரியவந்தது.

ஒரு மாதத்திலேயே இரண்டு குழந்தைகளை காப்பக நிர்வாகிகள் விற்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த காப்பகத்தில் இது வரை எத்தனை குழந்தைகள் முறைகேடாக இது போன்று விற்கப்படும் விற்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் காப்பகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணினியின் ஹார்ட் டிஸ்கை சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக ஒட்டுமொத்த குழந்தை கடத்தல் கும்பலையும் சுற்றிவளைத்து கைதுசெய்யும் முனைப்பில் தமிழக காவல்துறை இறங்கியுள்ளது. இது தமிழக அரசுக்கும் புதிய டிஐஜி சைலேந்திர பாபாவுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த தகவல் தமிழக முதல்வருக்கு கிடைத்ததும் குழந்தை கடத்தல் விவாகரத்தில் துரிதமாக முடிவெடுத்து செயல்பட அனைத்து அதிகாரங்களையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூடிய விரைவில் குழந்தை கடத்தல் கும்பல்களின் அட்டகாசம் தமிழகத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.