எதிர்க்கட்சிகளுக்கு நேரமே கொடுக்கக் கூடாது... முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்த மோடி-அமித் ஷா பிளான்!

எதிர்க்கட்சிகளுக்கு நேரமே கொடுக்கக் கூடாது... முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்த மோடி-அமித் ஷா பிளான்!

கடந்த 10 ஆண்டுகளில் தற்போது தான் பாஜகவின் வலிமை கொஞ்சம் குறையத்தொடங்கியதை போல தோற்றமளிக்கிறது. அது ஐந்து மாநில தேர்தலிகளில் வெளிப்பட்டது. மேலும் பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் பிராந்திய கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளன. இது போன்ற சூழலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் பிரசாந்த் கிஷோர், மமதா பானர்ஜீ, சரத் பவார் போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு க்கு போதிய அவகாசம் கொடுக்காமல் மக்களவைத் தேர்தலை விரைந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் ஆண்டுகாலம்  2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே வாக்கில் நிறைவடையும். அதைத் தொடர்ந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024இல் நடைபெற வேண்டும் என்பதே தற்போதைய கணக்கு. ஆனால் இதை மாற்ற பாஜக விரும்புகிறது. 

பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பல மாநிலங்களில் பாஜகவின் கூட்டாளிகளான பிராந்திய கட்சிகள் தற்போது பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளன. அதோடு கொரோனா காலத்தில் நடந்த மரணங்களும் பொதுமக்களிடையே பாஜகவுக்கு எதிரான மனநிலைய பல பிராந்திய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு பாஜக கொண்டு வந்த வேளாண்சட்டங்களை பாஜக கூட்டணி கட்சிகளே எதிர்த்துவருகின்றன.

அதோடு பாஜகவை எதிர்க்கும் கட்சிகளையே ஒரு வித நெருக்கம் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தன் பழைய நிலையை விட்டு பாஜகவை எதிர்க்க பிராந்திய கட்சிகளோடு பயணிக்க இசைவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோமா என்ற கேள்வி பாஜக மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பல திட்டங்களின் மூலம் பாஜக தடுத்து வருகிறது. மேலும், பல்வேறு வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்று சேராமல் தடுக்க பல்வேறு திட்டங்களை பாஜக முன்னெடுத்துள்ளது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வேகத்தை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

அனைத்து எதிர்க்கட்சிகளும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தே தற்போது திட்டம் தீட்டி வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கு ஒருங்கிணைய அவகாசமே கொடுக்காமல் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு வருடம் முன்பே தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று அமித் ஷா- மோடி கூட்டணி திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.