சைனாவுக்கே ரிவீட்டு வைக்கும் ஸ்டாலின்... 161 வருட திட்டம்!! தவிடுபொடியாக்க பலே பிளான்

சைனாவுக்கே ரிவீட்டு வைக்கும் ஸ்டாலின்... 161 வருட திட்டம்!! தவிடுபொடியாக்க பலே பிளான்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத்திட்டமாக இருந்த சேது சமுத்திர கால்வாய் திட்டம் அவரது கடைசி காலம் வரை நிறைவேறாத நிலையில் தற்போது அந்த திட்டத்தை அவரது புதல்வன் மு.க.ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். 

இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று பல பொருளாதார வல்லுநர்களால் கூறப்பட்ட திட்டம் தான் சேது சமுத்திர கால்வாய் திட்டம். தற்போது இந்தியாவின் மேற்கு கடலோர துறைமுகங்களிருந்து கிழக்கு கடலோர துறைமுகங்களுக்கு செல்லும் உள்நாட்டு கப்பல்களும். இந்திய பெருங்கடலிலிருந்து வரும் வெளிநாட்டு கப்பல்களும் இலங்கையை சுற்றிக்கொண்டே இந்தியாவின் கிழக்கு துறைமுக நகரங்களை அடைகின்றன.

சேது சமுத்திர திட்டம்: நேற்று இன்று நாளை....(தொடர்- 5) | A travel around  sethu samuthram project: series - 5

இதற்கு எரிபொருள் செலவாக பல்லாயிரம் கோடிகள் வீணாகின்றன. மேலும் கூடுதல் நேரமும் ஆகிறது. இதே கப்பல்கள் இலங்கையை சுற்றிச்செல்லாமல் குமரியியிலிருந்து மன்னார் வளைகுடா வழியாக தமிழக கடலோர வங்கக்கடலுக்கு பயணித்தால் அது பல்லாயிரம் கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும். 

ஆனால் தற்போது கப்பல்கள் அப்படி செல்லாமல் இலங்கையை சுற்றிச்செல்ல காரணம் மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் கடற்பகுதி பெரிய கப்பல்கள் செல்லமுடியாத அளவு ஆழம் குறைவான கடற்பகுதியாக இருப்பதே. மேலும் பல இடங்களில் திட்டு திட்டாக மணல் மற்றும் பாறைகளும் காணப்படும். இதன் காரணமாகவே அந்த பகுதி வழியாக பெரிய வர்த்தக கப்பல்கள் செல்ல முடியாமல் இருக்கிறது. ஒருவேளை அந்த பகுதியை செயற்கை முறையில் ஆளப்படுத்தினால் கப்பல்கள் இலங்கையை சுற்றிச்செல்வது தடுக்கப்பட்டு இந்த வழியாக பயணம் செய்ய இயலும். 

இந்த திட்டம் தொடர்பாக இப்பொது அல்ல 1860திலேயே  இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லர் மூலம் இந்த திட்டத்திற்கான ஆலோசனைகள் நடந்தது. ஆனால் அப்போதும் இலங்கையும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்ததால் பெரிய அளவில் இதற்கான தேவை எழவில்லை. அதன் பின் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  ஜூலை 2, 2005ல் இதற்கான திட்டப்பணிகள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப்பட்டது. மன்னார் வளைகுடா பகுதியில் 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. 

M Karunanidhi With Prominent Leaders of Indian Politics

ஆனால் அந்த பகுதியில் தான் ராமர் பாலம் அமைந்துள்ளது என்றும், அதன் மிச்சங்கள் தான் இந்த பாறை திட்டுக்கள் என்றும் பாஜக உள்ளிட்ட தீவிர ஹிந்துத்துவ இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இது போன்ற காரணங்களால் சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் பற்றி எந்த பேச்சும் எழவில்லை. 

ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானதாம்.. அண்ணா, சென்னை பல்கலை மாணவர்கள்  ஆய்வில் தகவல்! | The Ramar Palam is 18,400 years old: madras university and  Anna university students research ...

இந்நிலையில் தான் இலங்கையில் சீனாவின் முதலீடு பெரிய அளவில் அதிகரித்தது. அதோடு இலங்கையின் முக்கிய துறைமுகங்களான திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரு துறைமுகங்களுக்கு வந்துசென்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய பொருளாதார நன்மைகள் சீனாவுக்கு செல்கின்றன. 

China sets stage for President Xi Jinping to stay in office with proposal  to end term limits

இதன் காரணமாக தற்போது சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் மட்டும் நிறைவேறினால் மும்பை, கொச்சி, கோழிக்கோடு துறைமுகங்களுக்கு ஈடாக சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் வளர்ச்சி பெரும். மேலும் பொருளாதார ரீதியாக இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெரும் லாபம் அளிக்கும். 

இதை எல்லாம் முன்யோசித்தே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கடுமையாக முயன்றார். ஆனால் 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் தரப்பில் எந்த கோரிக்கையையும் ஒன்றிய அரசுக்கு கொடுக்கவில்லை. தற்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று பிரதமரை சந்திக்க டேலி சென்றுள்ளார். இந்த பயணத்தின் பொது சேது சமுத்திர கால்வாய்  திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. 

ஒருவேளை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது பொருளாதார ரீதியாக மட்டும் அல்லாமல், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கும். மேலும் சீனா இலங்கையில் செய்துள்ள பல்லாயிரம் கோடி முதலீடுகள் செல்லாக்காசாக மாறிவிடும். அதோடு இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனாவின் திட்டத்துக்கும் இது பெரும் பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.