மோடிக்கு எதிராக மாஸ்டர் ஸ்கெட்ச்...  விதை போட்ட பிகே!! அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு

மோடிக்கு எதிராக மாஸ்டர் ஸ்கெட்ச்...  விதை போட்ட பிகே!! அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவால் பெரிதாக சோபிக்கமுடியவில்லை, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்க தேர்தலில் 100 இடங்களை கூட அக்கட்சியால் கைப்பற்றமுடியவில்லை. இதற்கு முன் நடந்த பீகார் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு லல்லுவின் கூட்டணி பெரும் சவாலாக இருந்தது. 

இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளை விட பிராந்திய கட்சிகள் தற்போது வலிமையாக காட்சியமைக்கின்றன. இதில் திமுக,கம்யூனிஸ்ட்,திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிராந்திய கட்சிகளை ஒரே கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார் என்று டெல்லி அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

ஆரம்பத்தில் பாஜகவுக்காக தேர்தல் வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் பின்னர் பாஜகவை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கினார். அதுமட்டுமன்றி பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு சாதகமாக தேர்தல் வியூகமும் வகுத்தார். இந்நிலையில் தற்போது பாஜகவுக்கு எதிராக பிராந்திய கட்சிகளின் கூட்டணிக்கு முயன்று வருகிறார் என்று கூறப்படுகிறது.  

ஜூன் 11ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்த பிரசாந்த் கிஷோர் அடுத்த 10 நாள் இடைவெளியில் மீண்டும் அவரை சந்தித்துள்ளார். இது வழக்கமான சந்திப்பு தான் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னாலும் அதை யாரும் நம்பவில்லை என்பதே உண்மை 

இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் சரத் பவார் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் என்சிபி, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் கலந்து கொள்வார்கள்" என்று நேற்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் பிராந்திய கட்சி தலைவர்களை இணைத்து காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாம் அணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூயிருந்தார். இதன் மூலம் மூன்றாம் அணிக்கான முயற்சியை பிரசாந்த் கிஷோர் எடுத்துவருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. 

மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் பிராந்திய கட்சிகளை இப்படி ஒன்றிணைப்பது பாஜக மற்றும் மோடிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்றும், முன்பும் இதேபோல பிராந்திய கட்சிகளை இணைத்து தான் அப்போது வலிமையாக இருந்த இந்திரா காந்தியே தோற்கடிக்கப்பட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.