21 வருடங்களுக்கு பிறகும் செவிப்பறையில் ஒளிக்கும் கலைஞரின் அலறல்..!! வீடு புகுந்து லுங்கியுடன் தூக்கி செல்லப்பட்ட அவலம்!!

21 வருடங்களுக்கு பிறகும் செவிப்பறையில் ஒளிக்கும் கலைஞரின் அலறல்..!! வீடு புகுந்து லுங்கியுடன் தூக்கி செல்லப்பட்ட அவலம்!!
தன்னை சிறைக்கு செல்ல வைத்த கருணாநிதியை சிறைக்கு தள்ளுவேன் என சபதம் எடுத்து அந்த சம்பவத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி செய்த கால காலத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார் ஜெயலலிதா. சசிகலா குடும்பத்தோடு அவர் செய்த ஊழல்களை போட்டு போட்டு வைரலாக்கின அன்றைய சாட்டிலைட் டிவி சேனல்கள். 
 
ஜெயலலிதாவின் வீட்டில் குவிந்திருந்த செருப்பு முதல், நகைகளின் குவியல்களை பார்த்து வாயடைத்துப் போனர் பொதுமக்கள். இதனால் 1996-ம் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்து திமுக ஆட்சி நாற்கலியில் ஏறியது. ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றுப் போகும் அளவுக்கு பொதுமக்கள் அதிமுக மீது வெறுப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியின் போது 1996-ல் ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு 27 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 

அடிப்பட்ட பாம்பாக வெளியே வந்த ஜெயலலிதா சிறிது சிறிதாக விஷத்தை சேர்க்கத் துவங்கினார். 2001-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அரியணை ஏரிய ஜெயலலிதா, சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டி கருணாநிதியை கைது செய்ய போலிசாருக்கு உத்தரவிட்டார். 
 
இந்த கைது சம்பவம் சாதாரணமாக இல்லை. முன்னாள் முதலமைச்சர் என்றும் பாராமல், நள்ளிரவில் கோபாலபுரத்தில் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வயதானவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர் அதிகாரிகள். ”ஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே ”என்ற வரிகள் அனைவரையும் தூங்க விடாமல் பதட்டமடையச் செய்தது. 

மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த கைது குறித்து ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் எனக் கூறப்படுகிறது. அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கருணாநிதியை பந்து போல அங்கும் இங்கும் தள்ளிவிடப்பட்டு, லுங்கியோடு கைது செய்யப்பட்டு தூக்கிச் செல்லப்பட்டார். 
 
சாதாரண கைதிக்கு அளிக்கப்படும் உரிமை கூட முன்னாள் முதலமைச்சராக இருந்தவரும், எம்.எல்.ஏவாக இருந்தவருமான கருணாநிதிக்கு அப்போது அளிக்கப்படவில்லை. ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்படுகிறார் என்ற தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் காரில் அங்கு விரைந்தனர். ஆனால் பத்திரிக்கையாளர்களை திசை திருப்பி மறுபுறம் வேறோரு காரில் கருணாநிதி பின்புறமாக அழைத்து செல்லப்பட்டார்.

வேப்பேரி காவல்நிலையம் அழைத்து செல்லப்படுவதாக தகவல் கிடைக்க, அவரது குடும்பத்தினர் அங்கு சென்ற போது, காவல்துறையினருடன் வாக்கு வாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கருணாநிதியை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி உத்தரவிடப்பட்ட போதும், அதனை மதிக்காது நேராக சென்ட்ரல் அருகேயிருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை எதிர்த்து சிறை வாசலிலேயே சுமார் 1 மணி நேரம் தனது மகள் கனிமொழியுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார் கருணாநிதி. 

இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவி நிலையில், கட்சி தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் அப்பகுதியில் இருந்த மேம்பாலத்தில் ஒன்று கூடி ஜெயலலிதாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அவர்கள் மீது காட்டு மிராண்டித் தனமாக தடியடி நடத்தப்பட்டது. இதனை அறிந்த கருணாநிதி சிறைக்குள் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஏற்பட்டது. இருப்பினும் இன்றளவும் பல தமிழர்களின் காதுகளில் ஒலிக்கிறது கருணாநிதியின் அலறல்.. இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, கருணாநிதி இம்மண்ணை விட்டு சென்றுவிட்ட போதிலும் கூட இந்த நிகழ்வு மறையாத வடுவாய் இன்னும் நினைவில் இருந்துக் கொண்டே உள்ளது.