இனி தப்பு செஞ்சவங்க தப்பவே முடியாது! பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழக அரசு தயார்!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஜக்கு வழங்க தயார் என  தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அருளானந்தம் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாக  குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழக காவல்துறையை தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் எஸ்பி அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயார் என்றும் உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி,  ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.