திருடியது நான் இல்லை என்று சொல்லியும் விடாது சித்ரவதை செய்த கொடூரர்கள்!!பதைபதைக்கும் வீடியோ காட்சி...

மங்களூருவில் மீனவர் ஒருவரை கிரேனில் தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருடியது நான் இல்லை என்று சொல்லியும் விடாது சித்ரவதை செய்த கொடூரர்கள்!!பதைபதைக்கும் வீடியோ காட்சி...

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கிரேனில் தலைகீழாக தொங்கவிட்டு மீனவர் ஒருவரை சித்ரவதை செய்துள்ளனர். இவர் ஆந்திராவில் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், இவர் பெயர் வைலா ஷீனு  என்றும் தகவல் தெரிகிறது. மங்களூருவில் உள்ள கடலோரப் பகுதியான பந்தர் பகுதியில் அரங்கேறிய இந்தச் கொடூரச் சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், போன் திருடியதாக கூறி ஷீனுவின் கால்கள் கட்டப்பட்டு கிரேனில் தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி ஐந்து-ஆறு மீனவர்கள் நின்றுக்கொண்டு செல்போன் திருடியதை ஒப்புக்கொள்ளும்படி அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். 

ஆனால், ஷீனுவோ போனை திருடியவன் நான் இல்லை என்று சொல்வதைக் கேட்காமல் ஒருவன் ஷீனுவை கன்னத்தில் அறைந்தான், அப்போது பக்கத்தில் இருந்தவன்  அடிக்காதே என்று சொன்னான். தொடர்ந்து ஷீனு தனது கால்கள் மரத்து வலிக்கிறது என்று கூறுவதை சிறிதும் பொருட்படுத்தாமல் செல்போன் திருடியதை ஒப்புக்கொள்ளும்படி மீனவர்கள் சித்தரவதை செய்துள்ளனர். 

இப்படி திருடியதாக சொல்ல சொல்லி கிரேனில் தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இதனையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை அறிந்த போலீசார் கையும் களவுமாக அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.