ஒரு காதலுனுக்காக காட்டுத்தனமாக தாக்கிக்கொண்ட இரு காதலிகள்..!!

ஒரு காதலுனுக்காக காட்டுத்தனமாக தாக்கிக்கொண்ட இரு காதலிகள்..!!

திருடா திருடி திரைப்பட பாணியில் காதலனுக்காக தன் தாயுடன் சமாதான பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த பெண்ணை அவரின் சகதோழிகள் சேர்ந்து தாறுமாறாக தாக்கிய சம்பவம் தேனாம்பேட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் தோன்றிய காலம் முதலே பெண்கள் ஆண்களை விட குறைவாக தான் இருந்து வருகின்றனர். அதாவது எண்ணிக்கையில் குறைவாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாகவே மண்ணிற்காகவும், பொன்னிற்காகவும் நடைபெற்ற யுத்தங்களை விட ஒரு பெண்ணிற்காக நடைபெற்ற யுத்தங்கள் வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம்டா அதுல மேல இருக்கிறவன் கீழ வருவான் கீழ இருக்கவன் மேல போவான் அப்படிங்குற விஜய் பட வசனம் மாதிரி இந்த நூற்றாண்டு ஒரு மாபெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கு.

இந்தியாவில் இத்தனை வருடங்களாக ஆயிரம் ஆண்களுக்கு 700 பெண்கள் என்ற விகிதத்தை தாண்டி சென்றதே இல்லை அதற்கு சத்தி, பெண் சிசு கொலை என்று பல காரணங்களை சொல்லலாம் ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் பாலின கணக்கீட்டு அறிக்கையின் படி 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர் என்று அறிவித்திருக்கிறது. இதை இந்தியர் அனைவரும் பெருமைக்குரிய ஒரு சாதனையாக பார்த்தாலும் இதில் சில சிக்கல்களும் அடங்கியுள்ளது, குறிப்பாக பெண்களுக்கு.

ஏற்கனவே நல்ல மாப்பிள்ளை கிடைப்பது குதிரை கொம்பை போல் உள்ளது என்று பெண்ணை பெற்ற பெற்றோர்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள் அப்படி கிடைத்தாலும் வரதட்சணை கொடுமை வேறு. அவனுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணைக்கு பதிலாக மகளுக்கு ஒரு தொழிலை தொடங்கி வைத்தால் அவள் வருங்காலத்தில் மிகப்பெரிய ஒரு தொழிலதிபராக வந்துவிடும் வாய்ப்பாவது உள்ளது. 

இப்படி இவ்வளவு சிக்கல்களையும் பெற்றோர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ இன்றைய இளைய தலைமுறை பெண்கள் படு பயங்கரமாக சிந்திக்கிறார்கள். அதனால் தான் தனக்கு தேவையான துணையை தேடுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அப்படி தேடும் நபர் இன்னோருத்தியின் காதலனாக இருந்தாலும் பரவாயில்லை கணவனாக இருந்தாலும் பரவாயில்ல கரெக்ட் செய்தே ஆவோம் என்று அடம்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது.

ஆந்திராவில் இரு பெண்கள் ஒரு பையனுக்காக அடித்துகொண்ட காட்சி, ஆவடியில் இரண்டு பள்ளிக்கூட பெண்கள் ஒரு பையனுக்காக கும்பலாக கலவரத்தில் ஈடுபட்டக்காட்சி என்று கடந்த சில நாட்களில் மட்டும் ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் அடித்துக்கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு வருகிறது.  அந்த வகையில் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முன்னணி கல்லூரியில் படிக்கும்  மாணவிகள் இருவர் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு ஏழுமணி அளவில் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை தேனாம்பேட்டை சாலையில் தன் தாயுடன் சமாதான பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த பெண்ணை அவரின் சகதோழிகள் சேர்ந்து தாறுமாறாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவர் தனது தோழியின் காதலனுடன் நட்பு கொண்டு பழகி வந்துள்ளார் ஆனால் அந்த வாலிபன் தன் காதலியை விட்டுவிட்டு அவரின் தோழிக்கு ரூட்டு போட்டு அவரை கரெக்ட் செய்து விட்டதாக தெரிகிறது. 

இதனால் கடுப்பான அந்த வாலிபனின் முன்னாள் காதலி தன்னுடைய தோழியே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக எண்ணி அவர் மீது கடுமையான கோவத்தில் இருந்து வந்துள்ளார். எனவே தோழியின் காதலனையே கரெக்ட் செய்த அந்த பெண்ணிடம் மற்ற பெண்கள் நட்பு பாராட்டாமல் ஒதுங்கியுள்ளனர். பல வருட நட்பை முறித்துக்கொள்ள விரும்பாத அந்த பெண் கல்லூரி வாசலில் வைத்து தன் தாயுடன் பஞ்சாயத்து பேச முற்பட்டார்.

அந்த சமயத்தில் தன் காதலனை விட்டு பிரியும்படி முன்னாள் காதலி கோரிக்கை வைக்க அதற்கு கோக்குமாகாக பதிலளித்த பெண்ணை தோழி என்று கூட பார்க்காமல் அவரின் தாயின் முன்னிலையிலே வைத்து தாறுமாறாக தாக்கி தன் ஆதங்கத்தை தீர்த்து கொண்டார் அந்த பெண். 

அதற்குள் அடிவாங்கிய பெண்ணும் அவளின் தோழிகளும் இந்த பெண்ணின் மீது மருதாக்குதல் நடத்த சற்று நேரத்தில் சைதாப்பேட்டையை ஸ்தம்பித்து போய்விட்டது. பிறகு அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் வந்து இவர்கள் இருவரையும் பிரித்து வைத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார். திருட திருடி படத்தில் தனுஷிற்காக இரண்டு பெண்கள் அடித்துக்கொள்வது போல இங்கு ஒரு காதலனுக்காக இரண்டு பெண் தோழிகள் தாக்கிக்கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.