நடுரோட்டில் துப்பாக்கி எடுத்து சுட்ட பெண்.... மக்கள் பீதி..... பரவும் துப்பாக்கி கலாச்சாரம்..!!

நடுரோட்டில் துப்பாக்கி எடுத்து சுட்ட பெண்.... மக்கள் பீதி..... பரவும் துப்பாக்கி கலாச்சாரம்..!!

துப்பாக்கி கலாச்சாரம் என்பது வெளிநாடுகளில் அதிகம் இருந்துவரும் ஒன்று பொதுவாக வேட்டைக்காக, தற்காப்புக்காக, பொழுதுபோக்கிற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துக்கொள்வது சட்டப்படி அனுமதியுண்டு. ஆனால் இந்தியாவில் அவ்வளவு எளிதாக துப்பாக்கிகளை ஒரு குடிமகன் பெற்றுவிட முடியாது அதற்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அது முறைப்படி ஏற்கப்பட்டு செல்லுப்படியாகும் பட்சத்தில் குறைந்தது 2 மாதங்கள் கழித்துதான் ஒருவருக்கு துப்பாக்கி வழங்கப்படும் அதுவும் பல சட்டரீதியான கட்டுப்பாடுகளுடன்.

ஆனால் கருப்பு சந்தையில் துப்பாக்கி வாங்குவது என்பது அதைவிட எளிய செயல்... 10,000 முதல் 20, 000 ரூபாய் வரை வைத்துக்கொண்டு சரியான தொடர்பு இருந்தால் ஒரு நல்ல உயர்நிலை துப்பாக்கியையே வாங்கிவிடலாம். அப்படி கருப்பு சந்தையில் துப்பாக்கி வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது குறிப்பாக வட மாநிலங்களில் இந்த துப்பாக்கி கலாச்சாரம் சிலகாலமாக அதிகமாக பரவி வருகிறது. 

நேற்று டெல்லியில் பிரபல குண்டார் கும்பலான ஹரியானா நந்து கேங்கை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை 25 துப்பாக்கிகள் மற்றும் 47 தோட்ட கேட்டரைஜ் வைத்திருந்த குற்றத்திற்காக  டெல்லி காவல் துறை கைது செய்தனர். அவரை பிடிக்க முயற்சி செய்தபோது அந்த நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை போன்று இன்னும் பல நபர்கள் பல கும்பல்கள் துப்பாக்கியை உடமையாக வைத்துக்கொண்டு கும்பல் போர் மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி குண்டர்கள் ஒருபக்கம் துப்பாக்கியை வைத்து சம்பவம் செய்து கொண்டிருக்க உங்களுக்கு,  நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பெண்களும் தற்போது இந்த துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பெண் ஒருவர் நடுரோட்டில் பொதுஜனங்களுக்கு மத்தியில் துப்பாக்கியை சுட்டு ஆரவாரத்தை வெளிப்படுத்தி கொண்டாடியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த துப்பாக்கியை ஒரு மர்மநபர், பெண்ணிடம் கொடுக்கப்பட்டது போன்ற வீடியோ காட்சி பதிவாகியுள்ளது.
அந்த நபர் குண்டார் கும்பலை சேர்ந்தவர் என்று சந்தேகித்து வந்த நிலையில் சுடப்பட்ட துப்பாக்கியை பார்க்கும்போது அது காவல் துறையினருக்கு வழங்கப்படும் துப்பாக்கி போல் இருப்பதாக தெரிகிறது.

 எனவே அந்த பெண் யார் அவருக்கு துப்பாக்கி வழங்கிய அந்த நபர் யார் என்ற செய்திகளை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. விரைவில் அந்த பெண் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்படுவார். அவருடன் இருந்தவர் காவலர் தான் என்பது உறுதியானால் அவரின் பதவி பறிபோவதற்கும் வாய்ப்புள்ளது என்று உத்திரபிரதேச காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.