பாஜக சுப்பிரமணியன் சாமியால் எதிர்க்கப்பட்ட நபருக்கு  ஸ்டாலினின் பொருளாதார குழுவில் இடம்.!  யார் இந்த அரவிந்த் சுப்ரமணியன்.! 

பாஜக சுப்பிரமணியன் சாமியால் எதிர்க்கப்பட்ட நபருக்கு  ஸ்டாலினின் பொருளாதார குழுவில் இடம்.!  யார் இந்த அரவிந்த் சுப்ரமணியன்.! 

ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல், தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கான 'பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக்குழு' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். 

ஐந்து பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக ஜான் த்ரே, ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் ஏற்கனவே ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டுள்ளார். இவரை அந்த பதவியிலிருந்து மாற்றவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருந்தார். அதன்பின் அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியராக செயல்பட்ட இவர் அந்த பொறுப்பிலிருந்து விலகினார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஒன்றிய அரசை விமர்சித்த பிரதாப் பானு மேத்தா என்பவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. அதை கண்டித்து அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்தது இந்தியா முழுக்க பேசப்பட்டது. 

புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற இவரை இவரை உலகின் முதல் 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக  ஃபாரின் பாலிசி என்ற இதழ்  தேர்ந்தெடுத்தது. உலகளாவிய மேம்பாட்டு மையத்தில் மூத்த ஆய்வாளராகவும்,  அனைத்துலக நாணய நிதியத்தில் பொருளியலாளராகவும் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழக முதல்வரின் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.