போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர்...!!

போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர்...!!

உலகின் மிக அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான சுகோய் 30 ரக போர் விமானத்தில் விண்ணில் பறந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரலாற்று சாதனை படைத்துள்ளார். அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், ராம்நாத் கோவிந்துக்கு பிறகு போர் விமானத்தில் பறந்த 4-வது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தற்போதைய இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் 75-ஆம் ஆண்டு விழா மற்றும் காசிரங்கா தேசிய பூங்காவில் நடைபெற்ற ’காஜ் உத்சவ் 2023’ விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக, அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற அவருக்கு விமானப் படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

:இதனைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்கள் அணியும் உடை, தலைக்கவசம் என பாதுகாப்பு கவசத்துடன் உலகின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான சுகோய் 30 MKI ரக விமானத்தை பார்வையிட்டார். பின்னர், 2 பேர் மட்டும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சுகோய் 30 போர் விமானத்தில், விமானப் படை உயர் அதிகாரிகளின் உதவியுடன் இருக்கையில் அமர்ந்தார். விமானத்தை கேப்டன் நவீன் குமார் இயக்க, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கிலோ மீட்டர் வேகத்திலும் போர் விமானம் காற்றில் சீறிப் பாய்ந்தது. பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் பறந்த அந்த போர் விமானம், பின்னர் மெல்ல விமானப்படைத் தளத்திற்கு திரும்பியது. அப்போது, விமானத்திற்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள பலூன்கள் பறக்க பாதுகாப்புடன் தரையிறங்கியது. Watch: President Murmu takes sortie in Sukhoi 30 MKI fighter aircraft in  Assam | Mint

இதனைத் தொடர்ந்து விமானப் படையை சேர்ந்த அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இந்திய விமானப் படையின் வலிமைமிக்க சுகோய்-30 MKI போர் விமானத்தில் பறந்தது தனக்கு உற்சாகமான அனுபவமாக இருந்ததாகவும், நாட்டின் தற்காப்புத் திறனானது நிலம், நீர், வான் ஆகிய அனைத்து எல்லைகளை கடந்து அபரிமிதமாக விரிவடைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று என விமானப் படையின் பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்த இந்திய விமானப்படை மற்றும் தேஜ்பூர் விமானப்படை குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். Draupadi Murmu in Sukhoi: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने सुखोई 30 MKI में भरी  उड़ान, देखें VIDEO | Assam President Draupadi Murmu took off Sukhoi 30 MKI  fighter aircraft from Tezpur Air Force

முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு புனே விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய் போர் விமானம் மூலம் வானில் பறந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது போர் விமானத்தில் பறந்த இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரும் தங்களது பதவிக் காலத்தில் போர் விமானத்தில் வானில் பறந்தது குறிப்பிடத்தக்கது.