மாநில சுயாட்சி: நேரு முதல் ஆ.ராசா வரை ஒரு விவாதம்

மாநில சுயாட்சி: நேரு முதல் ஆ.ராசா வரை ஒரு விவாதம்

தனித்தமிழ்நாடு கோரிக்கையை கையில் எடுக்க வைத்துவிடாதீர்கள் என திமுக எம்.பி. ஆ. ராசாவின் பேச்சி தேசிய அளவில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வைத்துள்ளது. ஒன்று, மாநில சுயாட்சி சார்ந்த உரையாடல், இரண்டு மத்திய மாநில உறவைப் பற்றிய விவாதம். இந்த இரண்டு புள்ளிகளில் விவாதங்கள் கிளம்பியுள்ளதால் இதற்கு பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிக்க வேண்டும் என எதிர்வினையாற்றியுள்ளார்.


வலுவான அரசை கட்டமைத்த நேரு: 


இந்திய அரசியலமைப்பில் மாநிலங்களுக்கான சுயாட்சி அல்லது மாநில உரிமைகள் சார்ந்து உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்வி, மருத்துவம், நிர்வாக நடைமுறை உள்ளிட்ட வற்றில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 
இந்திய அரசியலில் மாநில சுயாட்சி பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் வலுவான மைய அரசாங்கத்தையே நேரு ஆதரித்தார் என்பது வியப்பளிக்கிறது.  கிரிப்ஸ் குழுவின் மாகாண பரிந்துரையை  நேரு ஆதரவு அளிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது.  வலுவான மைய அரசை நமது அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்ட அம்பேத்கார் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார்.  இன்றும் பலர் அதிகார பரவாலாக்கம் வேண்டும் என்றே வாதிடுகின்றனர்.  அவை நம்பத்தகுந்தவை சரியானவை நியாயமானவை என எண்ணப்படுகிறது. ஆனால் அவர்கள் எண்ணம் முற்றிலும் தவறானவை.  மாநிலங்களின் சுயாட்சி என்பது முட்டாள்தனமான ஒன்று இன்ற கோணத்தில் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு மாநிலம் சுயாட்சியை இழக்கும் போது மற்றொரு மாநிலம் அதற்கு தடை விதிக்கிறது.  சமீபத்திய நீதித்துறை தீர்ப்புகள் மாநில ஒழுங்கின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. மாநிலங்கள் மாவட்டங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகள் தாலுகாக்கள் பஞ்சாயத்துக்கள் போன்ற பிரிவுகள் நிர்வாக வசதிக்காக மிகவும் அவசியமான ஒன்று என்ற போதிலும் மாநில சுயாட்சி என்பது அவசியமானதாக மாறியுள்ளது. இந்த நடைமுறை இந்திரா காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை காலக்கட்டத்தின் போது பல மாற்றங்களைப் பெற்றது.   கல்வி உள்ளிட்ட பல விஷயங்கள் மாநில பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு மாறியது மாநிலங்களின் உரிமையை, மாநில சுயாட்சியைப் பறிக்கும் செயலாக மாறியதைக் கவனிக்கலாம். 


அமெரிக்க உதாரணமாகும் மாநில சுயாட்சி:


மாநில சுயாட்சியை வலியுறுத்தும் அனைவரும் அமெரிக்காவை உதாரணமாக கூறுகின்றனர்.  மேலும் அது வெற்றிகரமாக செயல்படுவதாக கருதுகின்றனர்.
உண்மையில் அது அவ்வாறு உள்ளதா என்று உற்று நோக்கும் போது அமெரிக்கா நிறுவப்பட்டு 87 ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரமான உள்நாட்டு போரை சந்தித்தது. இதில் உயிரிழப்புகளும் அதிகம்.  மாநில உரிமைகள்  வாதங்களே அந்த மோதலைத் தூண்டின. இதனால், தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அதிகாரத்திடமும், மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. 


மூன்றடுக்கு அரசாங்கத்தை நிறுவிய நேரு: 


1946ல் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றடுக்கு அரசாங்கத்தை நேருவின் இடைக்கால அரசு விலக்க  முக்கிய காரணம்  வலுவான மைய அரசை நம்பியதே ஆகும்.  மாகாண சுயாட்சி என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.  இந்திய இறையாண்மை மக்களாட்சி குடியரசு வலுவான ஒன்றியமாக உருவானதே அன்றி வலுவற்ற கூட்டாட்சியாக உருவாகவில்லை.


பன்முகத்தன்மை நிலைக்க வழி: 


மாநிலங்களின் சுயாட்சி இருந்தால் மட்டுமே பன்முகத்தன்மை நிலைக்க முடியும் என்ற கருத்து தவறானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஒருவகையில் மாநில சுயாட்சிக்கு எதிரான கருத்தாக உள்ளது. அதாவது, இந்தியா என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்ட போது, அது பல மாகாணங்களாக இருந்தன. அதற்கென்று தனித்த கலாச்சாரமும், வேறுபட்ட குணாம்சங்களும் இருந்ததைக் கவனிக்கலாம். ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக இந்த மாகாணங்களை ஒன்றாக்க முயன்றனர். சுதந்திர இந்தியாவிலும் கூட ஐதராபாத் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் வலுக்கட்டாயமாக இந்தியாவோடு இணைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் சில பதிவு செய்துள்ளனர். இந்த நடைமுறையானது, நிர்வாக நடைமுறையாக மட்டுமே பார்க்கப்பட்டது. நிர்வாக ரீதியான நடைமுறைக்காக மத்திய அரசு ஒருங்கிணைப்பு இடத்திலும், திட்டங்கள், அரசின் அறிவிப்புகள் மக்களுக்கு சென்றடைய மாநில அரசுகள் முழு சுதந்திரம் கொண்டதாக இருந்தன.  தற்போது முழு அதிகாரமும் குறிப்பாக, கல்வி, வரி வசூலித்தல் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றதால் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, மாநிலங்களின் உரிமைகளையும், அவர்களின் சுயாட்சியையும் பாதுகாக்க வேண்டியது வாக்களிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மிக முக்கியமானதாக உள்ளது.