கொஞ்சம் விட்டா அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார் சசிகலா... பங்கமாக கலாய்த்து தள்ளும் ஜெயக்குமார்

சசிகலா விட்டால் அண்ணாவுக்கே அறிவுரை சொன்னேன் என்று சொல்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கொஞ்சம் விட்டா அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார்  சசிகலா...  பங்கமாக கலாய்த்து தள்ளும்  ஜெயக்குமார்

 சசிகலா விட்டால் அண்ணாவுக்கே அறிவுரை சொன்னேன் என்று சொல்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையாகி சென்னைக்கு திரும்பினார். இதையடுத்து அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென யாரும் எதிர்பாரத வேளையில் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் அதிர்ச்சியடைந்த சசிகலா, கட்சியை இருவரிடம் ஒப்படைத்தது தவறு என குற்றம்சாட்டினார்.  மேலும் இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடம் செல்போனில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வருகிறார்.

அதில், கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பேன் கொரோனா பரவல் குறைந்த பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பேன் எனவும் கூறி வருகிறார். ஆனால் ஆயிரம் பேரிடம் சசிகலா பேசினாலும் தங்களுக்கு கவலை இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில்  கூறிய  நிலையில்  மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கே  அரசியல் ஆலோசனை கூறியதாக சசிகலா பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.  தூத்துக்குடியைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகி ராமசாமியுடனான தொலைப்பேசி உரையாடலில்  சசிகலா இவ்வாறு  கூறியிருக்கிறார்.

மேலும் தான் இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டதால் தனது ஆலோசனையை எம்ஜிஆர் கேட்டதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல எம்ஜிஆர் பேசும் போதெல்லாம் எப்படி பேச வேண்டும், எப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சசிகலா அட்வைஸ் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த ஆடியோவை கேட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை கலாய்த்துள்ளார். அதில், விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என சசிகலா சொல்வார் எனவும் மேலும், இதை விட ஒரு நகைச்சுவை உலகில் வேறு இருக்காது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.