ராமன் மகசேசே விருது பெற்ற சமூக சேவகர் எலா பட் மரணம்..இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள்!!!

ராமன் மகசேசே விருது பெற்ற சமூக சேவகர் எலா பட் மரணம்..இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள்!!!

பத்ம பூஷன் விருது பெற்றவரும் சமூக ஆர்வலருமான எலா பட் காலமானார். 89 வயதான எலா பட் அகமதாபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார். 

எலா பட் யார்?:

இந்தியாவின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் எலா பட்.  பெண்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.  பல பிரச்சாரங்கள் மூலம் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியுள்ளார்.  அதற்காக ஸ்வஷ்ரயீ மகிளா சேவா சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார் எலா பட்.

இந்த அமைப்பில் நீண்ட காலம் பணியாற்றினார் எலா பட்.  1972 முதல் 1996 வரை இந்த அமைப்பில் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார் எலா பட்.

உயரிய விருதுகள்:  

எலா பட் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1977ல் உலகின் உயரிய விருதான ராமன் மகசேசே விருதை பெற்றார் எலா. இதற்குப் பிறகு, அவருக்கு 1986 இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பின்னர் இந்திய அரசால் வழங்கப்படும் பத்மபூஷன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் எலா பட். 

எலா பட் மறைவு:

எலா பட்டின் மறைவால் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”கடவுள் அனுக்கிரகம் இல்லை” மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம்!!