அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ... கில்மா படங்களை மிஞ்சும் ஆபாச வீடியோக்கள்... சேட்டை செய்யும் ராஜேஷ்... ஆப்பு வைக்குமா போலீஸ்?

இளம்பெண்கள் தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ குத்தி கொள்வதை படம் பிடித்து, அதனை யூடியூபில் பதிவேற்றி அதன்மூலம் காசு பார்த்து வரும் கயவனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டாட்டூ என்ற பெயரில் சேட்டை செய்யும் ராஜேஷின் காவாளித் தனத்தை தற்போது பார்க்கலாம்.

அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ... கில்மா படங்களை மிஞ்சும் ஆபாச வீடியோக்கள்... சேட்டை  செய்யும் ராஜேஷ்... ஆப்பு வைக்குமா போலீஸ்?

பால்வடியும் முகம், ஒல்லியான தேகம், குறுந்தாடி என பார்ப்பதற்கு பச்சபுள்ள மாதிரி இருக்கும் இவன் தான் ராஜேஷ். ஆனால், இவன் செய்யும் சேட்டை கொஞ்ச நஞ்சமல்ல. 'வலிக்காமல் செய்வதில் தான் நான் பேமஸ்’ எனக் கூறிக் கொண்டு, டாட்டூ போட வரும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை யூடியூபில் பதிவேற்றி காசு பார்த்து வருகிறான் இந்த சேட்டை ராஜேஷ்.

  

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி தற்போது உல்டாவாகி, புதியன கழிதலும் பழையன புகுதலும் என்றாகிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்து, காலப்போக்கில் கைவிடப்பட்டு காலாவதியான விஷயங்கள் எல்லாம் இப்போது புதுமை என்ற பெயரில் புனர் ஜென்மம் எடுத்து வருகின்றன.

அவ்வாறு உலகெங்கிலும் பரவலாக காணப்பட்ட பச்சைக்குத்துதல் எனும் கலாசாரம், தற்போதைய நவீன யுகத்தில் டாட்டூ என புதிய அவதாரம் எடுத்துள்ளது.

டாட்டூவில் உள்ள விதவிதமான டிசைன்கள், வண்ணங்கள் மூலம் இளம் யுவதிகள் தங்களை மேலும் மெருகேற்றி அழகாக காட்டி கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இளையோர் மத்தியில் டாட்டூ கலாச்சாரம் தீயாகப் பற்றி எரிய, வழக்கம்போல கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பிரபலங்களே காரணமாக இருக்கிறார்கள். இந்த சூழலில், இளம் பெண்களுக்கு டாட்டூ மீதுள்ள காதலை காசாக்க கணக்கு போட்ட ராஜேஷ், டாட்டூ போடுவதை படம் பிடித்து யூடியூபில் பதிவேற்றி தனது சேட்டையை தொடங்கியுள்ளான்.

சென்னை முகப்பேரில் H2O டாட்டூ ஸ்டுடியோ வைத்துள்ள ராஜேஷ், ஆரம்பத்தில் தனது தொழிலுக்கு விளம்பரம் தேட வீடியோ பதிவு செய்த நிலையில், காலப்போக்கில் வியூவ்ஸ் மற்றும் பணத்திற்காக இரட்டை அர்த்த காமெடிகள் செய்வது, ஆபாசமாக பேசுவது மற்றும் இளம் பெண்கள் தங்களது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ குத்தி கொள்வதை படம் பிடித்து, அதனை யூடியூபில் பதிவேற்றுவது என தனது லீலைகளைக் காட்டியுள்ளான்.

சின்னஞ்சிறு குழந்தைகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இன்றைய காலத்தில், அவற்றுள் பெரும்பாலானோர் யூடியூபை உபயோகிக்கின்றனர். இந்த சூழலில், ஆபாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, மேலும் அறுவறுப்பை ஊட்டும் வகையில் எடிட்டிங் செய்து, அவற்றை யூடியூபில் பதிவேற்றி வருகிறான் இந்த சேட்டை ராஜேஷ். 

 சமீபத்தில் மதனை கைது செய்த போலீசார், சேட்டை ராஜேஷுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளரும் போது நாகரீகமும் வளரும் என்பது தான் இயற்கை விதி. மேலும், சுதந்திர நாட்டில் ஒவ்வொருவருக்கும் தாம் விருப்பப்பட்டதை செய்ய சுதந்திரம் உள்ளது. எனவே, இன்றைய நவநாகரீக மக்கள் டாட்டூ மீது கொண்டுள்ள மோகத்தில் தப்பேதும் இல்லை. ஆனால், அதனை ஒரு அழகுக்கலையாக மட்டுமே பார்க்காமல், அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போட்டுக்கொள்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும், அவர்களை மட்டுமல்லாமல் அவற்றைப் பார்க்கும் சிறு குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை யுவதிகள் உணர வேண்டும்.