கடைசி நேரத்தில் காலைவாரிய மோடி..! நம்ப வைத்து ஏமாற்றியதாக புலம்பும் ஓபிஎஸ்..!

ஓபிஎஸ்ஸை ஏமாற்றிய மோடி..!

கடைசி நேரத்தில் காலைவாரிய மோடி..! நம்ப வைத்து ஏமாற்றியதாக புலம்பும் ஓபிஎஸ்..!

மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் கிடைக்கும் என தனக்கு வந்த சோதனைகளை எல்லாம் பொருத்துக் கொண்டிருந்த நேரத்தில், பாஜக தலைமை கடைசி நேரத்தில் காலை வாரியதால், என்ன செய்வதென்று புரியாமல் புலம்பி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். 

ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது, சசிகலா கட்சியை வழிநடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக இருக்கட்டும் எனக் கூறி பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தினார். நாலாபுறமும் கடும் நெருக்கடியில் இருந்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடர்ந்தார். 

பின்பு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் போராடி, பன்னீர் செல்வத்தையும், எடப்பாடியையும் ஒன்று சேர்த்தனர். இருப்பினும் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை தவிர்த்து துணை முதலமைச்சர் பதவி மட்டுமே கிட்டியது ஓபிஎஸ்-க்கு.. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை களத்தில் இறக்கி வெற்றி பெற வைத்தார். 

நாடாளுமன்றம் சென்ற ரவீந்திராநாத் அதிமுக-வா அல்லது பாஜக-வா என தெரியாத அளவிற்கு பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ள ஆரம்பித்தார். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக யார் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த போது, தேர்தலில் ஜெயித்தால் முதலமைச்சர் பதவி உனக்கு, தோற்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவி எனக்கு என்ற ஒப்பந்தத்தில் ஒத்து போனார் ஓ.பி.எஸ். 

ஏன் இவர் இப்படி அனைத்திற்கும் அமைதியாக செல்கிறார்? என ஆராய்ந்து பார்க்கும் போது, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படும் போது பஞ்சாயத்து மேலே உள்ள பிரதமர் மோடி வரை சென்றது. மாநிலத்தில் நீங்கள் விட்டுக் கொடுங்கள், மத்தியில் உங்கள் மகனை மத்திய அமைச்சராக்கி அழகுபார்க்கலாம் என ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஐஸ் வைக்கப்பட்டது. 

இதனை நம்பி ஓகே சொன்ன ஓ.பன்னீர் செல்வத்திற்கு தற்போது துரோகம் இழைத்திருக்கிறது பாஜக மேலிடம். விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தன்னுடைய மகனுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என விசாரிக்கலாம் என டெல்லியில் விசாரித்துள்ளார் ஓ.பி.எஸ். ஆனால் அங்கிருந்து உங்கள் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்ற பதிலை பெற்ற அவர், மனம் உடைந்து போயுள்ளார். 

எனக்கு டெல்லி இப்படி துரோகம் செய்துவிட்டதே என்று தன்னை சந்திப்பவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். திடீரென டெல்லி பல்டி அடிக்க காரணம்? முதலமைச்சர் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழல் வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளனர். இந்த லிஸ்டில் முதலில் இருப்பது ஓ.பி.எஸ் என தகவல்கள் வெளியான நிலையில், ஒருவேளை இந்த புகார் நிரூபணமானால், கோர்ட், கேஸ் என்று இவர்கள் செல்ல வேண்டி இருந்தால், ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லி கொண்டு வரும் பாஜக, ஊழலில் சிக்கியவர்களுக்கு துணை போனதாகவிடும் என்பதற்காக தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளது..!