தற்காப்புக்காகத்தான் கொன்றேன்… கதறிய பழங்குடி பெண்ணை விடுதலை செய்த காவல் கண்காணிப்பாளர்!

திருவள்ளூரில் தற்காப்பிற்காக கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

தற்காப்புக்காகத்தான் கொன்றேன்… கதறிய பழங்குடி பெண்ணை விடுதலை செய்த காவல் கண்காணிப்பாளர்!

திருவாலங்காடு பகுதியை சேர்ந்த அமுதாவும் அவரது கணவர் பூங்காவனமும் மீஞ்சூர் அருகே வழுதிகை மேடு பகுதியில் மீன் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். தினமும் வேலை முடித்துவிட்டு பண்ணைக்கு அருகிலேயே கணவனும், மனைவியும் தூங்குவது வழக்கம். ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமுதா தனது கணவருடன் தூங்கி கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒருவர் அமுதாவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பூங்காவனம் அந்த நபரை தாக்கியுள்ளார். அப்போது இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து செய்வதறியாது நின்ற அமுதா உடனே அருகிலிருந்த கல்லை எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை தாக்கியுள்ளார். அதாவது தற்காப்பு நடவடிக்கையாக அந்த மர்ம நபரை அமுதா தாக்கி உள்ளார். இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலிசார் பழங்குடி பெண்ணான அமுதாவை கைது செய்து நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பிரிவு 100 ன் கீழ் அந்த பெண்ணை நேற்று விடுதலை செய்தார். தற்காப்பு தற்காப்பு நடவடிக்கையாகவே அந்த பெண் நடந்து கொண்டார். அந்த பெண்ணுக்கு வேறு வழியில்லை. இதனால் அவர் செய்தது தவறு கிடையாது. சட்டப்பிரிவு 100 ன் கீழ் அவர் செய்தது குற்றம் கிடையாது. அதனால் அவரை விடுதலை செய்யலாம் என்று எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டு, நேற்று அந்த பெண்ணை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார். எது சரி என்பதை அறிந்து செயல்பட்ட காவல் கண்காணிப்பாளரின் வருண்குமாரின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.