இப்போ கருப்பு பலூன் விடுங்க பாப்போம்....திமுகவை வம்புக்கு இழுத்த நடிகர் ராதா ரவி! 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை தமிழகத்திற்கு வந்தபோது கோ பேக் மோடி என கொடி பறக்கவிட்டவர்கள், தற்போது பறக்க விட முடியுமா என்று நடிகர் ராதாரவி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இப்போ கருப்பு பலூன் விடுங்க பாப்போம்....திமுகவை வம்புக்கு இழுத்த நடிகர் ராதா ரவி! 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை தமிழகத்திற்கு வந்தபோது கோ பேக் மோடி என கொடி பறக்கவிட்டவர்கள், தற்போது பறக்க விட முடியுமா என்று நடிகர் ராதாரவி காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் வரும் 12ஆம் தேதி பாஜக சார்பில் மோடி பொங்கல் என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவில் அவர் வேட்டி சட்டை இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் நலத்திட்டம் வழங்கும் ஒன்றில் ராதா ரவி பங்கேற்று பேசினார்.ராதாரவி என்ற பெயரைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சர்ச்சையை என்ற வார்த்தைதான். எம்,ஜி,ஆர் காலம் தொட்டு கடந்த 50 வருடங்களாக அரசியல் மேடைகளில் பேசி வருகிறார்.அரசியலில் கோக்கு மாக்காண கேள்விகளையும் ,சர்ச்சையான பதில்களையும் பேசு வருபவர்.

ஒரு திரைப்பட விழாவில் நயந்தாராவை பற்றி ஆபாசமாக பேசி,திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.அதன் பிறகு பாஜகவில் இணைந்தார்.அங்கேயும் ”தவளை தன் வாயால் கெடும்” என்பதை போல அங்கேயும் பல்வேறு சர்ச்சைகளில் மாற்றிக்கொண்டார்.பாஜகவில் சேர்ந்த கடந்த ஒரு வருடமாக பாஜக கட்சிக்குள் கசப்புடன் தான் இருக்கிறேன் என்றும் கட்சியில் சேர சொல்லி அழைக்கும்போது வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் ஆனால் சேர்ந்த பிறகு நாம் யார் என்று தெரிவதற்கு பயோடேட்டாவை கொடுக்க வேண்டும் போல என்று அவர் வேதனையும் தெரிவித்திருந்தார்.

பாஜகவில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.அடுத்து 80 எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதை தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார் ஆனால் இப்போது அவரை அருகில் வைத்துள்ளார் என்றும் விமர்சனம் செய்தார்.

மாநில அரசு மத்திய அரசை நோக்கி கையேந்தி தான் ஆக வேண்டும் பிரதமர் கடந்த முறை வந்தபோது கோ பேக் மோடி என கொடி பறக்கவிட்டவர்கள், தற்போது ஜனவரி 12ம் தேதி பிரதமர் வரும்போது கொடி பறக்க விடுவார்களா என்று ஒரு கேள்வி எழும் முன் வைத்துள்ளார்.தற்போது திமுகவை வம்புக்கு இழுத்துள்ளார்.