புதிய ஒளிப்பதிவு வரைவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! என்ன தான் சொல்கிறது இந்த வரைவு..?

புதிய ஒளிப்பதிவு வரைவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!

புதிய ஒளிப்பதிவு வரைவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! என்ன தான் சொல்கிறது இந்த வரைவு..?

ட்விட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகள் தொடங்கி இயக்குநர்கள் வரை பலரும் புதிய ஒளிப்பதிவு வரைவுக்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல படங்கள் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. திரைத்துறையின் சுதந்திரத்தை பறிப்பதாக இருப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.என்ன தான் சொல்கிறது இந்த புதிய ஒளிப்பதிவு வரைவு..

இந்தியாவில் தயாராகும் எந்தத் திரைப்படமும் மத்திய திரைப்பட தணிக்கைக்குழுவின் சான்று பெற்றே வெளியாக முடியும். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாலியல், வன்முறைக் காட்சிகளைப் பொறுத்து படங்களுக்கு யு, யு/ஏ, ஏ சான்றுகள் அளிக்கப்படும். யு படத்தை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ படத்தை 18 வயதுக்குட்பட்டவர்கள் பெரியவர்களின் துணையுடன் பார்க்கலாம். ஏ சான்றிதழ் பெற்ற படத்தை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர். இந்தியாவில் யு மற்றும் யு/ஏ இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதாவது அனைத்து வயதினரும் இந்த சான்று பெற்ற படங்களைப் பார்க்கிறார்கள்.

தணிக்கைக்குழு ஒரு படம் தகுதியற்றது என்று கருதினால், அதற்கு சான்றுதர மறுக்கலாம். அப்படி மறுக்கப்படும் திரைப்படங்கள் திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு அனுப்பினால் அவர்கள் படத்தைப் பார்த்து சான்றிதழ் தருவார்கள். 

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) என்பது நீதிமன்றத்தைப் போன்றே சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் எழும் சிக்கல்களை விசாரித்துத் தகுந்த தீர்ப்புகளை இத்தீர்ப்பாயம் வழங்குகிறது. ... நிறுவனச் சட்ட வாரியத்துக்கு (National Law Board) மாற்றாக இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 தணிக்கைக்குழுவின் முடிவு சரி என்று கருதினால் தீர்ப்பாயமும் சான்றிதழ் மறுக்கும். சம்பந்தப்பட்டவர்கள் பிறகு நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். ஆனால், தணிக்கைக்குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட 90% திரைப்படங்கள் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்றிருக்கின்றன. சுருக்கமாக படைப்பாளிகளுக்கு தீர்ப்பாயம் ஒரு அவசர காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் என்று சொல்லலாம்.

ஆனால் தற்போது இந்த புதிய ஒளிப்பதிவு வரைவின் படி இந்த தீர்ப்பாயம் கலைக்கப்படும். இதனால், தணிக்கைகுழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட படங்கள் நீதிமன்றத்தை நாடுவது ஒன்றே வழி. அவர்களுக்கிருந்த இன்னொரு வாசல் முழுமையாக அடைக்கப்படும். 

சரி நீதிமன்றத்தை நாடலாம் என்றால், அங்கு தான் புகுந்து விளையாடுகிறது இந்த புதிய சட்ட வரைவு. ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் ( 1952 ) திருத்தங்களை செய்து புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 கொண்டு வரப்பட்டிருக்கிறது.  அதன்படி ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும்.

தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்து படத்தை வெளியாக விடாமல் செய்ய முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை மத்திய அரசு பெறுகிறது.

திரைப்படத் தணிக்கை மறுசீராய்வுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட சில வாரங்களில் இந்த சட்டவரைவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அரசுக்கு எதிராகவோ, அதன் தவறுகளை சுட்டிக் காட்டியோ இல்லை விமர்சித்தோ ஒருவர் படம் எடுத்தால் அப்படம் வெளியாகாமல் தடுக்கும் எதேச்சதிகாரத்தை இதன் மூலம் அரசு பெறுகிறது.து படைப்பாளியின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் செயல் என திரைப்பிரபலங்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

 

யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும் அரசுக்கு ஒவ்வாமையான படைப்புகளை வெளிவராமல் செய்ய இந்த சட்டவரைவு வழிவகுக்கிறது. இது போன்ற சட்டங்களால் மனிதனுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் பறிக்கப்படும். அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை மட்டுமே மக்களுக்கு காட்ட வேண்டும். அந்த கருத்துகளை மட்டுமே மக்களிடம் விதைக்க வேண்டும் என்ற அளவுக்கு சினிமா துறை தள்ளப்படும். 

இந்த புதிய சட்டவரைவுக்கு, கமலஹாசன், சூர்யா, கௌதம் வாசுதேவ்மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்தி, சீனு ராமசாமி, லிங்குசாமி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.