எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் மாற்றம் ஏன்? அடுத்த உயர் அதிகாரி யார்...வாய்ப்பு இருக்கிறதா?

எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் மாற்றம் ஏன்? அடுத்த உயர் அதிகாரி யார்...வாய்ப்பு இருக்கிறதா?

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தில்  எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியரை மட்டும் பணியிடை மாற்றம் செய்தது  ஏன்? இன்னும் வேரயாரயினும் பதவி மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதா?

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்:

சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தை தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள்  பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் தீ வைத்து எரித்தனர்.  போராட்டத்தை கலைக்க வானை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதும், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கற்களை வீசி காவல்துறையினரை காயப்படுத்தினர். ஒரு வழியாக கலவரம் ஆரம்பித்த அன்று மாலையே ஒரு முடிவுக்கு வந்தது. 

போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி:

டிஜிபி சைலேந்திர பாபுவோ, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். முதலமைச்சர் கூட போராட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்தில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை விதிக்கப்படும் அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

நீதிமன்றம் சரமாரி கேள்வி - 

இதனைத்தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர்களை  போலீசார்.  கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில்,   மாணவியின் பெற்றோர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வன்முறை திட்டமிடப்பட்டது, யார் இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுத்தது? நீதிமன்றம் வந்த பிறகு பொருமை காக்க முடியாத என சரமாரி கேள்வி எழுப்பினார். மீண்டும் மாணவியின் உடலை மறு பரிசோதனை செய்து அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், டிஜிபி தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

இன்று மறுபிரேத பரிசோதனை:

நீதிபதியின் உத்தரவின் பேரில் இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுபிரேத  பரிசோதனை நடந்துமுடிந்தது. இந்த பரிசோதனையின் அறிக்கை மாணவிக்கு சாதகமாக வ்ருமா? அல்லது பள்ளிக்கு சாதகமாக வருமா? என்பது குறித்த கேள்வி எழுந்து வருகிறது. இந்த இரண்டில் எது நடக்கப்போகிறது என்பதை, இன்று நடந்து முடிந்த  மாணவியின் மறுபிரேத பரிசோதனையின் முடிவிலும், 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கில்  நீதிபதி கொடுக்கப்போகும் தீர்ப்பிலும் தான் உள்ளது. 

டிஜிபி சிறப்பு புலனாய்வு குழு:

இதனிடையே மாணவி உயிரிழந்த வழக்கில் டிஜிபி தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து விசாரிக்க டிஜஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்புக் குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.  

பணியிடை மாற்றம் செய்யப்பட்ட எஸ்.பி., மாவட்ட ஆட்சியர்:

இதனைத்தொடர்ந்து  சிறப்புப் புலனாய்வுக் குழு தன் விசாரணையை தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி புதிய எஸ்.பி.யாக திருவெல்லிகேணி காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்த பகலவனையும், தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஜவன்குமார் ஜவ்வத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

ஏன் இந்த பணியிடை மாற்றம்:

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  வன்முறையின் போது அங்கிருந்த காவல் கண்காளிப்பாளர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல்  சட்ட ஒழுங்கை பேணிகாக்க தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. அதுமட்டுமின்றி தமிழக அரசு மீதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த சூழ்நிலையில், மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி இறந்ததையடுத்து, ஜூலை 17ஆம தேதி கலவரம் வெடித்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்கள் இருவருரின் நடவடிக்கைகள் என்ன என்பது கேள்வி குறியாகிய நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக்கு பிறகே தற்போது எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து வேரேனும் உயர் அதிகாரிகள் பணி மாற்றம் செய்ய வாய்ப்பு இருகிறதா:

மாவட்டத்தை பொறுத்தவரையில் களத்தில் இருக்கக்கூடிய முக்கியமானவர்கள் எஸ்.பியும் மாவட்ட ஆட்சியர் இருவரும் தான். இந்த சம்பவத்தைபொறுத்த வரையில், கூடுதல் பொறுப்பு வகித்து செயலாற்றிருக்க வேண்டியவர்கள் இவர்கள் இருவர், ஆனால் அதனை அவர்கள் சரியாக செய்யாமல் போராட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் செயல்பட்டதால் தான் தற்போது இந்த பணியிடை மாற்றமானது நிகழ்ந்துள்ளது. இவர்களை தொடர்ந்து வேறு யாரேனும் மாற்றம் செய்யப்படுவார்களா? என்பது  டிஜிபி அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்யும். அதனை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளாக வேறுயாரேனும் மாற்றம் செய்யப்படுவார்களா? என்பது  எட்டப்படும்.