தலைக்கனத்தை உடைத்த ஹிமாச்சல்...மாறுமா பாஜக?!!!

தலைக்கனத்தை உடைத்த ஹிமாச்சல்...மாறுமா பாஜக?!!!

மாநிலத்துடனான பிரதமர் நரேந்திர மோடியின் உணர்வுப்பூர்வமான தொடர்பு மற்றும் அவரது அதி தீவிர தேர்தல் பேரணிகள் பாஜகவைக் காப்பாற்றியதுடன் கௌரவமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்று தந்தது.

பாஜகவின் தோல்வி:

பதவிக்கு எதிரான போக்கு, ஜெய்ராம் தாக்கூர் அரசின் மோசமான செயல்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்களின் கோபம், அதிகாரவர்க்கத்தின் மீதான முதலமைச்சரின் கட்டுப்பாடு இல்லாமை, எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வர் வேண்டும் என்ற கேட்கப்படாத கோரிக்கை, போன்ற வெறுப்பின் சுமையை ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தாங்க வேண்டியிருந்தது.  

சிறிய துளி நம்பிக்கை:

மறுபுறம், ஹிமாச்சல் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு உயிர்நாடி போன்றது.  இது இனிவரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு ஊக்கமளிக்கும். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளைத் தவிர, தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதால், இந்த முடிவுக்கான பெருமை விழிப்புடன் இருக்கும் வாக்காளர்களையே சாரும்.

ஹிமாச்சல் தேர்தல், ஜெய்ராம் தாக்கூருடன் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கும் கௌரவப் பிரச்சினையாக இருந்தது.  ஆனால் இருவரும் அதில் தோல்வியே அடைந்தனர்.  

காப்பாற்றப்பட்ட கௌரவம்:

மாநிலத்துடனான பிரதமர் நரேந்திர மோடியின் உணர்வுப்பூர்வமான தொடர்பு மற்றும் அவரது அதி தீவிரமான தேர்தல் பேரணிகள் பாஜகவின் முகத்தைக் காப்பாற்றியது மற்றும் கௌரவமான எண்ணிக்கையிலான இடங்களையும் பெற்று தந்தது. ஹிமாச்சலில் பல காரணங்களால் மக்கள் பாஜக மீது பெரும் அதிருப்தியையே கொண்டிருந்தது.  அதை சரி செய்ய பாஜக எவ்வித முயற்சியும் செய்யவில்லை.  இதுவே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம்.  பாஜக அமைச்சர்கள் 11 பேரில் 8 பேர் வெற்றி வாய்ப்பை இழந்ததே அவர்களின் செல்வாக்கற்ற தன்மையை சொல்ல போதுமானது. 

தேர்தல் வியூகம்:

6 முறை முதலமைச்சராக இருந்த மறைந்த வீரபத்ர சிங்கின் புகழை முன்னிறுத்தி, யாரையும் முதலமைச்சராக முன்னிறுத்தாமல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது.   இரண்டாவதாக, மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்கை விஜயம் செய்ய வைத்தது காங்கிரஸ்.  

மூன்றாவதாக, பரஸ்பர வேறுபாடுகளைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற பிரியங்கா வத்ராவுக்கு ஹிமாச்சலில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகத்தின் முழுப் பொறுப்பையும் காங்கிரஸின் உயர் கட்டளை வழங்கியது. நான்காவதாக, இமாச்சலத்தை ஒரு சிறிய பிரிவாகக் கருதிய முந்தைய மாநிலப் பொறுப்பாளர்களைப் போலல்லாமல், தற்போதைய பொறுப்பாளர் ராஜீவ் சுக்லாவும் அவரது செயலாளர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உட்கட்சி பூசலை ஊக்கப்படுத்தினர்.

ஆட்சிக்கு வரும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதுடன், ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் வழங்க முடிவு செய்யப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதியும் வாக்காளர்களைக் கவர்ந்தது என்றே கூற வேண்டும். 

பிரியங்காvsமோடி:


சோனியா மற்றும் ராகுல் காந்தி ஹிமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் இல்லை.  அதே சமயம் வாய்வீச்சாளர் நரேந்திர மோடி தனது உரைகளில் வாக்காளர்களுடன் எப்போதும் இணைந்தே இருந்தார். இத்தகைய சூழ்நிலையில், பிரியங்கா வதேரா தனது உரைகளில் சிம்லா தனது வீடு என்றும், பாட்டி இந்திரா காந்திக்கு இந்த மலை மாநிலத்தின் மீதுள்ள பற்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள், குறிப்பாக அரசு ஊழியர்களின் கோபம், ஆர்எஸ்எஸ்-ன் மிகப்பெரிய வலையமைப்பு போன்றவை தோல்விக்கான காரணங்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.  

எதிர்பார்க்கும் மாற்றம்:

எது எவ்வாறாக இருந்தாலும் இது புதிய ஆட்சிக்கான மாற்றம் எனவும் மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கின்றனர் என்பதும் தெளிவாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.  மேலும் மத்திய அரசிடம் மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதையே இந்த தேர்தல் தோல்வி காட்டுவதாக உள்ளது எனவும் கூறுகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பலிக்காத மோடியின் முகம்...என்ன செய்ய போகிறது பாஜக?!!