ஈ.பி.எஸ்ஸின் கடிதம் நிராகரிக்கப்பட்டதா..? அப்போ மத்திய அரசு ஓ.பி.எஸை ஆதரிக்கிறதா..?

ஈ.பி.எஸ்ஸின் கடிதம் நிராகரிக்கப்பட்டதா..? அப்போ மத்திய அரசு ஓ.பி.எஸை ஆதரிக்கிறதா..?

அதிமுகவின் எம்.பி, பதவியில் இருந்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் நீக்கப்பட்டுவிட்டதாக மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவுக்கு ஈ.பி.எஸ் கடிதம் எழுதிய நிலையில், மக்களவை அலுவலக குறிப்பில் ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாக நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பிளவு:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்ததையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது.

ஜூலை 11:

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் இடைக்காலப் பொதுசெயலாளர் ஆனார். அதேசமயம் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கலவரம் வெடித்தது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் பின் சீலை அகற்றக்கோரி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் மகன்கள் நீக்கம்:

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற பின் கட்சியின்  பொருளாளராக  இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத்,  ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பழனிசாமி, தேனி மக்களவை தொகுதி எம்.பியாக இருக்கும் ரவீந்திரநாத்தை, அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என்று கூறியிருந்தார்.

ஈ.பி.எஸ் ஸின் கடிதத்தை மறுக்கும் ஓ.பி.எஸ்:

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் ரவீந்திரநாத்தை நீக்கியதாக ஈ.பி.எஸ் எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். 

மக்களவை அலுவலக குறிப்பில் ரவீந்திரநாத் பெயர்:

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவரை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என்று ஈ.பி.எஸ் கடிதம் எழுதிய நிலையில், இன்னும் மக்களவை அலுவலக குறிப்பில் அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத் பெயர் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஈ.பி.எஸ்ஸின் கடிதம் நிராகரிக்கப்பட்டதா?:

மக்களவை அலுவலக குறிப்பில் இன்னும் அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத் பெயர் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில்,  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் ஸின் கடிதம் நிராகரிக்கபட்டுவிட்டதா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுகிறது. இதன்மூலம் ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசு ஓ.பி.எஸை தான் ஆதரித்து வருகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பாஜக தரப்பினர் அதனை ஒரு இடத்தில் கூட விமர்சிக்கவில்லை. அதேபோன்று டெல்லி சென்ற ஈ.பி.எஸ் க்கு பிரதமர் மற்றும் அமித்ஷா இருவரும் பார்ப்பதற்கு நேரம் வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் சேர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துக்கொண்டாத தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையெல்லாம் பார்க்கும்போது தான் மத்திய அரசு பன்னீர் செல்வத்தைhttps://twitter.com/OfficeOfOPS ஆதரிக்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பிகிறது. இந்நிலையில் தற்போது மக்களவை சபாநாயகருக்கு ஈ.பி.எஸ் கடிதம் எழுதியும் , இன்னும்  மக்களவை அலுவலக குறிப்பில்  அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத் பெயர் நீடிப்பதாக தகவல் வெளியாகியிருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கிறது.