சிங்கப்பூரின் அதிபராக தமிழர் தேர்வு...! யார் இந்த தர்மன்?

சிங்கப்பூரின் அதிபராக தமிழர் தேர்வு...! யார் இந்த தர்மன்?

சிங்கப்பூரின் 9 வது அதிபராக தமிழரான தர்மன் சண்முகசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.  சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.Image

சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 இல் பிறந்த தர்மன், ஒரு நல்ல விளையாட்டு வீரர் மற்றும் கவிஞர் ஆவார். சிங்கப்பூரில் "நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி எமரிட்டஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினத்தின் மூன்று குழந்தைகளில் ஒருவர் தான் தர்மன். இவரது தந்தை சண்முகரத்தினம்  சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யூமிகோ இட்டோகியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.Image

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) இல் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற தர்மன் சண்முகசுந்தரம் மேற்படிப்புக்காக  வொல்ப்சன் கல்லூரிக்குச் சென்றார், அங்கு பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் மாணவரான தர்மன் சண்முகசுந்தரம் அங்கு பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் சிங்கப்பூரின் கல்வி அமைச்சராக 2003 இல் நியமிக்கப்பட்ட அவர், 2008 வரை இந்தப் பொறுப்பில் பணியாற்றினார். மேலும், 2006, 2011, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Image

2007 மற்றும் 2015 க்கு இடையில் நிதி அமைச்சராகவும், 2011 மற்றும் 2012 க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும், 2015 மற்றும் 2023 க்கு இடையில் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். 2011 மற்றும் 2019 க்கு இடையில் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும், 2019 மற்றும் 2023 க்கு இடையில் மூத்த அமைச்சராகவும் தர்மன் பணியாற்றியுள்ளார்.

ஜூன் 2023 இல், தர்மன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருக்க விரும்புவதாக அறிவித்தார். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 70 சதவீதம் வாக்குகளை பெற்று தர்மன் சண்முகசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கோக் சாங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் முறையே 15.7% மற்றும் 13.8% வாக்குகளைப் பெற்றனர்.Image

ஏற்கனவே, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அரசியல்வாதியான எஸ் ஆர் நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 2009 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அதிபராக பணியாற்றினார், அதே சமயம் தேவன் நாயர் என்று அழைக்கப்படும் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்த செங்கரா வீட்டில் தேவன் நாயர் 1981 முதல் 85 வரை சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராக பணியாற்றினார்.

இதையும் படிக்க: "கச்சத்தீவு மீட்பு; ஆலோசித்து நடவடிக்கை" எல்.முருகன் நம்பிக்கை!