"ஸ்மால்" சங்கி அண்ணாமலை அட்ராசிட்டிஸ்..! ஐ.பி. அவுங்க கையிலயாம்.!

தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணாமலை, ஊடகங்களை மிரட்டும் விதமாக பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செல்லும் இடமெல்லாம் தைரியமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எதையாவது உளரும் அண்ணாமலையால், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

"ஸ்மால்" சங்கி அண்ணாமலை அட்ராசிட்டிஸ்..!  ஐ.பி. அவுங்க கையிலயாம்.!

கர்நாடக காவல்துறையின் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட அண்ணாமலை, அங்கு இருக்கும் போது ஒரு பேச்சு. தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு ஒரு பேச்சு என தன்னை உருமாற்றிக் கொண்டார். நான் கன்னடன், நான் தமிழன் என அவ்வப்போது எதையாவது உருட்டிக் கொண்டே இருப்பார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செந்தில் பாலாஜியை, அடித்து பற்களை கழற்றப் போவதாகப் பேசி கைதட்டல்களை வாங்கினார்.

தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்பதை மறந்து விட்டு, பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பெண்ணுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு, குரளி வித்தை காட்டினார். தற்போது தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின், கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே என்று இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்ட திட்டம் போட்டு அதற்கான போஸ்டர்களையும் ஒட்டி பல்பு வாங்கிக் கொண்டார்.

திருப்பூரில் அவருக்கு நேற்று வரவேற்பு கொடுத்த போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக நிர்வாகி ஒருவர், அமித் ஷா ஒரு பெரிய சங்கி என்றும், அவரது லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை என்று கூற, அண்ணாமலையோ அடி வாங்கிய பாட்ஷா பாய் சிரிப்பது போல ஆனந்தப் புன்னகை செய்தார். இந்தப் பேச்சைக் கேட்ட மீம் கிரியேட்டர்கள், நீங்களே உங்களை கலாய்த்துக் கொண்டால் பின்னர் நாங்கள் எதற்கு என்று தங்களது கவலைகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ராசிபுரம் சென்ற போது அண்ணாமலையை பார்த்து ஒருவர் ஏன் இங்கு வந்தீர்கள் என கேள்வி கேட்கவே, அவர் திகைத்துப் போனார். எங்கு சென்றாலும் இந்த நிலைமை தானா என வெறுத்துப் போனார் அண்ணாமலை. நான் தமிழனே இல்லை என கூறிய உங்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பிய நபரை பா.ஜ.கவினர் அப்புறப்படுத்தினர்.

இதைதொடர்ந்து அண்ணாமலை காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி செல்லும் இடமெல்லாம் கலாய்க்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட அண்ணாமலை இந்த விரக்தியை தற்போது மீடியாக்களிடம் காட்டியுள்ளார். இன்னும் 6 மாதத்தில் மீடியாக்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என்று அண்ணாமலை கொக்கரித்துள்ளார்.

எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதால் இந்த வேலை எளிதாகி விடும் என்று அண்ணாமலை கூறுவதை அவ்வளவு எளிதாக கடந்து சென்று விட முடியாது. எனவே, ஊடகங்களை மிரட்டும் அண்ணாமலை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.