அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்! 

அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்! 

வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..?" என  அஜித்தை பார்த்து ஆன்டி இந்தியன்  படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா கூறியுள்ளது பெரும் சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் வினோத். இவர் அஜித்தை வைத்து ஹிந்தி பட ரீமேக்கான பிங்க் என்ற படத்தை இயக்கினார்.போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில்  வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.'வலிமை' படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவையம் மக்களிடம் பிரபலமாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் மிகவும் முக்கியமானவர் அஜித். அஜித்குமார் ரேஸ் பிரியர்... மிகசிறப்பாக வாகனங்களை இயக்குவதில் வல்லவர் என்பது நாம்  அறிந்ததே.......கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. வலிமை  படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கால் இப்படம் சந்தித்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை உணர்வுப்பூர்வமாக தொகுத்து இந்த மேக்கிங் வீடியோவை உருவாக்கி இருந்தனர்.மேலும் அஜித் உயிரை பணயம் வைத்து செய்த ஸ்டண்ட் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்ப்பும் கிடைத்தது. அதில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற காட்சிகள் மனதை பதைபதைக்கும் வகையில் இருந்தன. 

பைக் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடம் வலிமை மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதில் படத்தின் சண்டை காட்சிக்காக நிஜமாகவே பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்தபோது அஜீத் சாலையில் வழுக்கி விழும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. 

ஆனால் இதை விமர்சிக்கும் விதமாக தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். "இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே…. சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..?" என தன்னுடைய விமர்சனத்தை கடுமையாக முன் வைத்துள்ளார்.

நடிகர் அஜித்தை சீண்டியுள்ள தயாரிப்பாளரின் இந்த வார்த்தைகளுக்கு அஜித் ரசிகர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்