கலைக்கப்படுகிறது உதயநிதி ரசிகர் மன்றம்? கட்சி பொறுப்பிற்கு விண்ணப்பிக்கும் ரசிகர் மன்றத்தினர்!!

கலைக்கப்படுகிறது உதயநிதி ரசிகர் மன்றம்? கட்சி பொறுப்பிற்கு விண்ணப்பிக்கும் ரசிகர் மன்றத்தினர்!!

2012 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போதே தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டது.  ஆரம்பத்தில் ரசிகர் மன்ற பணிகள் முழுவதையும் தற்போது அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஸ் கவனித்து வந்தார்.  மாவட்டம், ஒன்றியம் என நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு திரைப்படம் வெளியீட்டிற்கு மட்டுமல்லாமல், திமுக தேர்தல் பிரச்சாரம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் பணிகளிலும் ரசிகர் மன்றத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

பிரச்சாரத்திற்கு மட்டுமா?:

கடந்த காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த நட்சத்திரங்கள் தங்களது ரசிகர் மன்றங்களை கட்சியுடன் இணைக்கப்பட்டு தற்போது அவைகள் அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகின்றனர்.  10வருடங்களாக செயல்பட்டு வந்த உதயநிதி ரசிகர் மன்றத்தினருக்கு கட்சியிலும் சரி தேர்தலிலும் சரி எந்த வகையான பதவிகளும் பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை.  

2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டனர்.  குறிப்பாக அன்பில் மகேஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவெரும்புதூர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ரசிகர் மன்றத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர் மன்றம் டூ அரசியல் கட்சிகள்:

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்ததை தொடர்ந்து  கட்சியின் அனைத்து பிரிவினருக்குமான மாநில பொறுப்புகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது மாவட்ட அளவிலான பொறுப்புக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்த தேர்வுகள் இருக்கும்.  தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை கட்சி தலைமையே அறிவிக்கும்.

சில தினங்களுக்கு முன்பு பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்று கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் மன்றங்கள் கலைக்கப்படலாம் என்ற கூறிய நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள்  திமுக மாவட்ட அளவிலான பொறுப்பிற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.  பெரும்பாலும் இளைஞரணி, மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிக்கே விண்ணப்பித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  சீனாவிடமிருந்து நிதி பெறுகிறதா ராஜீவ் காந்தி அறக்கட்டளை?!!! அனுராக் தாக்கூர் கேள்விக்கு ராகுலின் பதிலென்ன?!!