நீட் தேர்வு கிடையாது என்று ஏன் அறிவிக்கவில்லை,.! வைகோ கேள்வி.!

நீட் தேர்வு கிடையாது என்று ஏன் அறிவிக்கவில்லை,.! வைகோ கேள்வி.!

இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு இறுதி ஆண்டுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளதே  தவிர, நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு இறுதி ஆண்டுத்தேர்வுகளை மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால் நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. எனவே நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, பன்னிரண்டாம் வகுப்பு  தேர்வுகளை நடத்த வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.