கொரோனா சான்றிதழில் மோடி படம்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பஞ்சாப் அரசு!!

கொரோனா சான்றிதழில் மோடி படம்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பஞ்சாப் அரசு!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு வழங்கப்பட்ட கொரோனா சான்றிதழிலிருந்து பிரதமர் மோடியின் படத்தை அதிரடியாக நீக்கி பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வடமாநிலங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்த நிலையில்,  சான்றிதழிலிருந்து பிரதமரின் படத்தை நீக்கி ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் நடவடிக்கை  
எடுத்திருந்தன. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலமும், 
கொரோனா தடுப்பூசிக்கு பின் மக்களுக்கு வழங்கும் சான்றிதழில் இடம்பெற்றிருந்த மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது. மேலும் அந்த அரசு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: 

கோவின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கப்படும் தடுப்பூசி சான்றிதழில்தான் பிரதமர் படம் இடம் பெற்றுள்ளது. நாங்கள் அந்த இணையதள சான்றிதழை வழங்காமல், பஞ்சாப் மாநிலத்துக்காக தனியாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் இருந்து தடுப்பூசி செலுத்துவோருக்கு சான்றிதழ் வழங்குகிறோம். அதில் யாருடைய படமும் இடம் பெறவில்லை..
இவ்வாறு பஞ்சாப் அரசு விளக்கமளித்துள்ளது.