கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 21நாட்களாக வீணாக வெளியேறும் தண்ணீர்...

நாகப்பட்டிணம் கீழ்வேளூர் ரயிலடி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு  21 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு  21நாட்களாக  வீணாக வெளியேறும் தண்ணீர்...

நாகப்பட்டடினம்  மாவட்டம் கீழ்வேளூர் அருகே ரயிலடி சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் கீழ்வேளூர் தாலுக்கா முழுவதும் 40 வருவாய் கிராமங்கள் மற்றும் திருக்குவளை, தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு வழியாக வேதாரண்யம் வரை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் கடந்த 21 நாட்களாக இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சீனிவாசபுரம் வாய்க்கால் முழுவதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து செய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.