அது நாகரீகமான அரசியலாக இருக்காது.... ராமதாஸ் சாடல்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றினால்  அது நாகரீகமான அரசியலாக இருக்காது என்றும், மக்களுக்கு நலன் பயக்கும் அரசியலாகவும் இருக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில்  இப்போது சுமார் 500 மாணவர்கள் மருத்துவப் படிப்பை படித்து வரும் நிலையில், மருத்துவமனை மாற்றப்பட்டால்  மருத்துவக் கல்லூரியை மூடும் நிலை உருவாகும் என தெரிவித்துள்ளார்.

எனவே தலைமைச்செயலகம் வராது என அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் தேவை என்றால் அவற்றை அமைக்க மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும் என கூறியுள்ளார்.