மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம்... தயாநிதி மாறன் வேண்டுகோள்!!

கொரோனா போரில் நாம் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஊரடங்கு தளர்வு அளித்திருந்தாலும் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம்... தயாநிதி மாறன் வேண்டுகோள்!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம் என தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தேவை இருப்பின் வெளியில் வர வேண்டும்.  இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம் என தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் நாம் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட வில்லை. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.