தடுப்பூசிகளுக்கு பணம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ. ... அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விவகாரம்

கர்நாடகா மாநிலத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்கீடு செய்ததாக பாஜக எம்.எல்.ஏ.வான சதீஷ் ரெட்டியின் உதவியாளரான பாபு கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய சூழலில், ஆடியோ மூலமாக புதிய ஊழல் புகார் எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் அந்த ஆடியோவில், மருத்துவமனை ஊழியர் ஒருவர் சமூக சேவையாளர் ஒருவரிடம் பேசியுள்ளார்.

அதில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்காக, பாஜக எம்.எல்.ஏ.வும், பாஜக எம். பியின் உறவினருமான ரவி சுப்ரமணியா அலுவலகத்தில், 900 ரூபாய் செலுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர் கூறியது அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் அரசு மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற கருத்தும் அந்த ஆடியோவில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, தடுப்பூசி தட்டுப்பாட்டின் மூலம் பாஜக தலைவர்கள் பணம் பறித்துவருவதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாஜக எம்.எல்.ஏ.ரவி சுப்ரமணியாவை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.