தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆட்டுச் சந்தை... 2 கோடிகளுக்கு வர்த்தகம்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளிப் பண்டிகையை யொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தைகளில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆட்டுச் சந்தை... 2 கோடிகளுக்கு வர்த்தகம்...

திண்டுக்கல்: செம்பட்டியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக செம்பட்டி ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், என திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் தேனி மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு வர்த்தகம் செய்ய அதிக அளவில் செம்பட்டி சந்தைக்கு வருகின்றனர்.

மேலும் படிக்க  | தீபாவளிக்கான இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்..வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!

கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து இருந்தனர். இதனால் அந்த மாதம் முழுவதும் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் நிறைவடைந்ததாலும், வரும் திங்கள் கிழமையன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும், இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது.

அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது.

மேலும் படிக்க | தீபாவளியை முன்னிட்டு...சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...!

வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இன்று தீபாவளியையொட்டி சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

இன்று ஒரே நாளில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | தீபாவளி பண்டிகை...உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

தென் மாவட்டங்களில் கால்நடை சந்தைகள் மூடல்: ரூ.70 கோடி வா்த்தகம் பாதிப்பு-  Dinamani

கடலூர்: வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச்சந்தையில் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான சேப்பாக்கம், சிறுபாக்கம் திட்டக்குடி, கழுதூர்,  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது கூடுதல் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

அவற்றை விற்பனைக்காக இந்த வாரச் சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இதில் கொடி ஆடு, செம்பரி ஆடு, வெள்ளாடு பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இந்த ஆட்டு சந்தை அதிகாலை 3 மணியிலிருந்து துவங்கப்பட்டது.

மேலும் படிக்க | தீபாவளி முன்பணம் கோரி மலையகத் தொழிலாளர்கள் போராட்டம்!

ஒரு ஆடு  ஐந்தாயிரம் முதல்  30 ஆயிரம் ரூபாய்  வரை விற்பனை செய்யப்பட்டது சந்தையில் விழுப்புரம், திருவண்ணாமலை சேலம், மதுரை, கள்ளக்குறிச்சி, சென்னை,  திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு 3 கோடி ரூபாய் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. மழை பெய்வதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வியாபாரிகள் வரத்து குறைவாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ரசிகர்களோடு தனது படத்தை பார்த்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன்.. படம் சிறப்பாக வந்துள்ளதாக பேட்டி..!

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களைகட்டும் ஆடு விற்பனை!

விழுப்புரம்: மாவட்டம் செஞ்சியில் வாரம் தோறும் வெள்ளிகிழமை ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். அதேபோல் இன்று காலை தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு சந்தை நடைபெற்றது.

அதில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, திருச்சி, விராலிமலை, சேலம், நாமக்கல், வேலூர், புதுச்சேரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு தாங்கள் கொண்டு வந்திருந்த ஆடுகளை விற்றனர்.

மேலும் படிக்க | இனி நியூயார்க்கிலும் தீபாவளிக்கு விடுமுறை.. மேயரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

அதன்படி காலை 2 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தை இதுவரையிலும் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த ஆட்டு சந்தையில் வந்திருந்த வியாபாரிகள் தீபாவளி பண்டிகைக்கு இறைச்சி விற்பனைக்காக ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

வழக்கமாக 3000 ரூபாய்க்கு விற்ற ஆடுகள் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூபாய் 6 ஆயிரம் முதல் 10000 வரை விற்பனை ஆனதால் ஆடுகள் கூடுதல் விலைக்கு விக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ‘சோழா டோரா’ உடையில் பிரதமர் மோடி...3,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்...!

கே.வி.குப்பம் வாரச் சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை அமோகம்- Dinamani