தீபாவளிக்கான இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்..வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!

தீபாவளிக்கான இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்..வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!

இயன்றவரை ரயில்களை சீராக இயக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நடைமேடை எண்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் எந்த ரயிலின் பிளாட்ஃபாரமும் கடைசி நேரத்தில் மாற்றப்படாது எனவுய்ம் தெரிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு ஏற்பாடு:

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் தெரிந்துகொள்க:   நீங்கள் ரயிலில் பயணிக்கிறீர்களா!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

சீரான இயக்கம்:

முடிந்தவரை ரயில்களை சீராக இயக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைமேடை எண்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் எந்த ரயிலின் பிளாட்ஃபாரமும் கடைசி நேரத்தில் மாற்றப்படாது எனவும் கூறியுள்ளது.

30 நிமிடங்களுக்கு முன்னதாக: 

சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து ரெயில்களும் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக நடைமேடைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸப் குழுக்கள்:

பிரத்யேக வாட்ஸ்அப் குழு மூலம் வழக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அனைத்து எஸ்கலேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே அமைப்பு:

ரயில் நிலையத்தில் பயணிகள் எந்த பிரச்சனையும் சந்திக்காத வகையில் முறையான ரயில் விசாரணை அமைப்பு மற்றும் அறிவிப்பு அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும்  அனைத்து ரயில் தகவல் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளதால் அவை புதுப்பிக்கப்பட்ட தகவல்களைக் காண்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.  

மருத்துவ வசதி:

இது தவிர, ரயில் நிலையங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                                                                                                                                      -நப்பசலையார்

இதையும் படிக்க:   பாஜகவுடன் மீண்டும் இணைகிறாரா நிதிஷ் குமார்?!!