தீபாவளி பண்டிகை...உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

தீபாவளி பண்டிகை...உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

புதுச்சேரி நகரப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இனிப்புகள் தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்தனர். மேலும் எண்ணெயின் தரம் மற்றும் இனிப்புகள் தயாரிக்க தேவையான பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தனர் தொடர்ந்து விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிந்த இனிப்புகளை சோதனை செய்து மாதிரிகளையும் எடுத்துச்சென்றனர்.

மேலும் படிக்க : உதவித் தொகை கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டம்!

பல்வேறு இனிப்பு கடைகளில் ஆய்வு செய்து 60 க்கும் மேற்பட்ட இனிப்பு மாதிரிகள் பரிசோதனை  செய்யப்பட்டுள்ளதாகவும் இது வரை எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கலப்படம் செய்யப்பட்டது உறுதியானால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.