தீபாவளியை முன்னிட்டு...சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...!

தீபாவளியை முன்னிட்டு...சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு உள்ளிட்ட  தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்துள்ளனர். 

தீபாவளி கோலாகலம்:

தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: துப்பாக்கிச் சூடு சம்பவம்... ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

இந்நிலையில் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல  கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், கிளாம்பாக்கம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு பேருந்து நிலையங்களை அமைத்து, 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. 

ஒரே நேரத்தில் படையெடுக்கும் மக்கள்:

அதன்படி, மாலை முதலே சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மக்கள் ஒரே நேரத்தில் கார், பைக் என தங்களது வாகனங்களில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்வதால், தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.