ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் படம் வெளியாகி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரே குஷி...

அஜித் நடிப்பில், துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியான நிலையில் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் படம் வெளியாகி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரே குஷி...

பொங்கல் திருநாளை ஒட்டி, அஜித் நடித்துள்ள துணிவு படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு படம் என இரு பெரும் நடிகர்களின் திரைப்படங்களும் ஒரே நாளில் ரீலீஸ் செய்யப்பட்டன. இதனால் தமிழ்நாடு முழுவதும் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | உலகின் தலைசிறந்த பாடகர்களுடன் போட்டி...விருதை தட்டி சென்ற “நாட்டு நாட்டு” பாடல்...!

திருப்பத்தூர் | நகர் பகுதியில் உள்ள சிகேசி, திருமகள், ராமஜெயம் ஆகிய மூன்று திரையரங்குகளில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆரவாரம் செய்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித் போன்று வேடமிட்டு வந்த ரசிகருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். 

திருப்பத்தூர் | மீனாட்சி, கலைமகள், பாலமுருகன்,  உள்ளிட்ட 7 திரையரங்குகளில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் திரையரங்கில் குவிந்த விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க | ‘வாரிசு’ பட கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்து விபத்து...

தேனி | போடியில் உள்ள ஜீவன் திரையரங்கில் துணிவு படம் வெளியானது இதேபோன்று,  ஆரா திரையரங்கில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானது. இதில், வெற்றி திரையரங்கில் ஒரு காட்சி துணிவு திரைப்படமும், ஒரு காட்சி வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டன.  இரு திரையரங்கிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வாண வேடிக்கையுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு கேட்டை தாவி குதித்து அலப்பறை செய்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத ரசிர்கள், திரையரங்கில், அமராமல் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திரை உரிமையாளர்கள் திணறிப் போயினர்.

மேலும் படிக்க | துணிவு- வாரிசு ரிலீஸ்....கிழிக்கப்பட்ட பேனர்கள்....

ராமநாதபுரம் | ஒரே வளாகத்தில் உள்ள இரண்டு திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் நடித்த 2 திரைப்படங்களும்  திரையிடப்பட்டன. இதனால், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் அதிகாலை 4 மணியளல் கடும் குளிரிலும் திரையரங்கம் முன்பாக குவிந்து,  பட்டாசு  வெடித்து   உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி | எட்டு திரையரங்கில் துணிவு திரைப்படம் வெளியிடப்பட்டது. திரையரங்கின் முன்பாக குவிந்த ரசிர்கள் பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அஜித்தின் கட் அவுட் க்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். 

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு பிடித்த நாயகனின் படம் வெற்றி பெற ரசிகர்கள் செய்த காரியத்தைப் பாருங்கள்...

சேலம் | சிறப்பு காட்சியாக ஒரு மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, மாலை தோரணங்களை கட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். அத்துடன் பட்டாசு வெடித்தும், வாண வேடிக்கை வெடித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி | 5 திரையரங்குகளில், விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியிடப்பட்டது. இதில் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில், ஈடுபட்டனர். படம் பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்கள் படம் வேற லெவல் என்றும், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சென்டிமென்ட் படம் என்றும் கருத்து தெரிவித்தனர். 

மேலும் படிக்க | ‘வாரிசு’ வெற்றி பெற ரத்த தானம் கொடுத்த ரசிகர்கள்...