குழந்தைகளுக்கு பிடித்த நாயகனின் படம் வெற்றி பெற ரசிகர்கள் செய்த காரியத்தைப் பாருங்கள்...

நடிகர் விஜயின் வாரிசு படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் நெகிழ வைக்கும் ஒரு காரியத்தை செய்திருக்கின்றனர்.

குழந்தைகளுக்கு பிடித்த நாயகனின் படம் வெற்றி பெற ரசிகர்கள் செய்த காரியத்தைப் பாருங்கள்...

மயிலாடுதுறை | நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடியில் உள்ள கிருபாலயம் மன வளர்ச்சி குன்றிய காப்பக பள்ளியில் விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாட்டர் டேங்க், மின்விசிறி, குடம் மற்றும் சமையல் உபகரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர். மேலும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் அங்குள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இனிப்புகளை கொடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க | ‘வாரிசு’ வெற்றி பெற ரத்த தானம் கொடுத்த ரசிகர்கள்...