‘வாரிசு’ வெற்றி பெற ரத்த தானம் கொடுத்த ரசிகர்கள்...

நடிகர் விஜயின் ‘வாரிசு’ படம் வெற்றி பெற அவரது ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்துள்ளனர்.

‘வாரிசு’ வெற்றி பெற ரத்த தானம் கொடுத்த ரசிகர்கள்...

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை அதிகாலை 4:00 மணிக்கு உலகம் முழுவதிலும் வெளியிடப்படுகிறது. மேலும் அஜித் குமார் நடிக்கும் துணிவு படமும் நாளை வெளியிடப்படுகிறது.

9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் இதனால் அஜித்,விஜய் ரசிகர்கள் இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அரசியல் கட்சியினரை மிஞ்சிய விஜய், அஜித் ரசிகர்கள்...

இந்த நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விஜய் மக்கள் இயக்கம் திருச்செந்தூர் ஒன்றியம் சார்பில்  வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் விஜய் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.

இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் விஜய் படத்துடன் கலல்ந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

மேலும் படிக்க | முதல்ல - துணிவா... வாரிசா? சண்டை போட்ட ரசிகர்கள்... திண்டாடிய தியேட்டர்