தாய் பாசம் என்பது மிகவும் பெரிய ஒன்று. என்னதான் நாம் எவ்வளவு பெரியவர்களானாலும், நம் தாய் பாசம் என்று வந்தாலே, நாம் ஒரு குழந்தையாகவே மாறி விடுவோம்.. அந்த தாயானவள் வெறும் கருவில் சுமப்பது மட்டுமல்ல, மனதாலும் சுமந்து பாதுகாப்பாள்.
ஆனால், இந்த தாய் பாசம் மனிதர்களுக்கு மட்டுமா என்ன? அப்படி கேட்டால் அது உண்மை இல்லை, ஏன் என்றால், அனைத்து வகையான உயிர்களுக்குமே உச்சபச்ச பாசம் தரக்கூடிய ஒரு ஜீவன்ன்ன அது தாய் தான். அதிலும், நன்றியுள்ள நாய்களுக்கு பாசம் என்றால் என்னவென்று எல்லாருக்கும் தெரியும்...
மேலும் படிக்க | மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
மனிதனாக இருந்தால் என்ன, மிருகமாக இருந்தால் என்ன, தாய் பாசம் ஒன்று தான் என்பதை நிரூபிக்கும் வகையில், காஞ்சிபுரத்தி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகில் தனி நபருக்கு சொந்தமான ஒரு இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
மேலும் படிக்க | கோவை கார்குண்டு வெடிப்பு..முக்கிய தகவலை வெளியிட்ட என்ஐஏ!!!
இதன் அருகில் ஒரு பெண் நாய், இரண்டு நாட்களுக்கு முன் மூன்று குட்டிகளை பெற்று பாதுகாத்து வந்தது. பொதுவாக நாய்கள், குட்டிகளை மற்ற விலங்குகளிடம் இருந்து காக்க பள்ளத்தில் தான் பாதுகாக்கும். அது போல தான் இந்த பெண் நாயும், தனது அழகான மூன்று குட்டிகளை, கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் இருக்கும் கால்வாய் அருகில் வைத்து வளர்த்து வந்தது.
திடீரென்று இன்று, எதிர்பாராத விதமாக, சுமார் ஒரு மணி நேரமாக, வல்லக்கோட்டையே அதிரும் அளவிற்கு கனமழை பெய்ததில், அந்த கழிவுநீர் கால்வாய் நிரம்பி வழிந்தது. அந்த கால்வாயில், மூன்று குட்டிகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, அந்த கால்வாய் உள்ளே தவறி விழுந்துள்ளது.
பதறி போன அம்மா நாய், தனது குட்டிகளை காப்பாற்ற அங்கும் இங்குமாக, குறுக்க மறுக்க ஓடி தவித்துள்ளது. அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு அந்த அம்மா நாயின் தவிப்பு புரியவில்லை போலும். ஆனால், அங்கு கட்டுமான பணிகள் செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த சித்தாள் ஒருவர், அந்த நாயை பல நாட்களாக கவனித்ததில், அந்த நாய்க்கு ஏதோ பிரச்சனை என புரிந்து உதவ முன்வந்துள்ளார்.
கால்வாயையே சுற்றி சுற்றி வந்த அம்மா நாய் தனியாக இருப்பதை பார்த்து, அதன் குட்டிகள் விழுந்தது அவருக்கு புரிந்து, கழிவுநீர் கால்வாயில் கையை விட்டு, மூன்று குட்டிகளையும் மீட்டுள்ளார். ஆனால், அந்த குட்டிகள், சற்றே பிறந்ததால், தண்ணீரில் மூழ்கி, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளது. அந்த குட்டிகள் இறந்தே போனது என பயப்படாமல், அந்த அம்மா நாய், தனது நாக்கால் குட்டிகளை சுத்தம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி உள்ளது.
நீண்ட நேரம் ஆனாலும், நிறுத்தாமல், மனம் தளராமல், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மூன்று குட்டிகளையும் உயிர் பிழைக்க வைத்துள்ளது அந்த அம்மா நாய். இந்த நெகிழ்வான சம்பவத்தை கட்டிட பணிகள் செய்யும் ஊழியர்களும், அந்த பகுதி மக்களும் மனமுருக பார்த்து ரசித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அது மட்டுமில்லாமல், அந்த அம்மா நாய்க்கு தன்னோட குட்டிகளை காப்பாற்றிக் கொடுத்த கட்டிட தொழிலாளிக்கும், எல்லோரும் பாராட்டுகளை தெரிவித்தனர். வாயில்லா ஜீவனின் குட்டிகளைக் காப்பாற்றி தாய்மை என்பது மனிதருக்கும் மிருகங்களுக்கும் ஒன்று தான் என புரிய வைத்த இந்த சம்பவம் வல்லக்கோட்டை பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.