மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

Published on

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து  மீன் பிடிக்க சென்ற ஏழு மீனவர்களையும்,  ஒரு விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது. இதனைக் கண்டித்து இன்று ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்று  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில்  800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com