அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு...காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் பரபரப்பு!

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு...காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் மேற்கு மாவட்ட நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ”அரசியல் வியாபாரி” என்று விமர்சனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையும் படிக்க: இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்...உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சொல்வது என்ன?

காவல்துறையுடன் தள்ளுமுள்ளு:

பின்பு காரில் கொண்டுவரப்பட்ட அண்ணாமலையின் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது, இந்த செயலை கண்டு தடுத்து நிறுத்திய காவல் துறையினருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு  நிலவியது.