116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை... ஆவின் நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்...

ஆவின் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிக்கைக்கு இந்தாண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை... ஆவின் நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்...

தீபாவளி பண்டிக்கைக்காக ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக, ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகப்பட்டன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு 82 கோடி 24 லட்சம் ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு 200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.116 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 'ஆவின்' இனிப்பு வகைகளுடன் ... ஓர் தித்திக்கும் தீபாவளி ...

அந்த வகையில், கடந்த ஆண்டை காட்டிலும் 40% விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பை விட அதிக அளவில் புதிய இனிப்பு வகைகளை கொண்டு வந்த நிலையில், ஆவின் நிறுவனம் கண்ட அதீத இலக்கு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இரண்டாடுகளாக சரியாக தீபாவளி விற்பனை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு வசூல், அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு தயாராகும் ஆவின்...