'ஆவின்' இனிப்பு வகைகளுடன் ... ஓர் தித்திக்கும் தீபாவளி ...

தீபத்திருநாளை ஒட்டி, குறைந்த விலையில், ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்கிறது. மேலும், பல புதிய இனிப்புகள் வரிசையில் இணைந்திருக்கிறது.

'ஆவின்' இனிப்பு வகைகளுடன் ...  ஓர் தித்திக்கும் தீபாவளி ...

தீபாவளி பண்டிகை என்றாலே படபடக்கும் பட்டாசும், நாவில் எச்சில் ஊறும் பலகாரமும்தான் நம்நினைவுக்கு வரும். அதுவும் தரமான, சுவையான இனிப்பு வகைகளை சாப்பிடவே பலரும் விரும்புவர்.

'ஆவின்' இனிப்புகளுடன் 'ஓர் தித்திக்கும் தீபாவளி' 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆவின் நிறுவனம் சார்பில், தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்வதற்கான பணிகள் அம்பத்தூர் பால் பண்ணையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | தீபாவளி வந்தாச்சு.. அரசு ஊழியர்களுக்கு போனஸும் அறிவிச்சாச்சு.. எவ்வளவு தெரியுமா?

ஆவினில் 9 வகை இனிப்புகள் புதிதாக அறிமுகம் 

இந்த ஆண்டு தீபாவளிக்கு, புதிதாக 9 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி, பிஸ்தா ரோல், நெய் முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 250 கோடி 3ரூபாய் இலக்கு வைத்து, சுமார் 3 ஆயிரத்து 200 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | புதுக்கோட்டை : வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கிய துப்புரவு தொழிலாளர்கள்...!

ரூ.250 கோடி இலக்கு ; 3,200 டன் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு

ஆவின் நிறுவனத்தை லாபகரமாக கொண்டு செல்ல அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருவதாகவும், இதுவரையில் போக்குவரத்து துறை சார்பில் 70 டன் இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆவினுக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ”பன்னீர் செல்வத்துடன் ஏன் சமாதானம் குறித்து பேச வேண்டும் ?” கேள்வியெழுப்பிய ஜெயக்குமார்!!!

இனிப்புகளில் வெரைட்டி காட்டும் ஆவின் நிறுவனம்

ஆவினுக்கு வரக்கூடிய ஆர்டர்கள் மற்றும் மக்களின் தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் இனிப்புகள் தயார் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஆவின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நடையோட்டம்...

படபடக்கும் பட்டாசு, நாவில் எச்சில் ஊறும் இனிப்பு வகைகள்

தீபாவளியை தித்திப்புடன் கொண்டாட ஏதுவாக, இனிப்புகளில் வெரைட்டி காட்டி வருகிறது ஆவின்.. மற்ற தனியார் இனிப்பு கடைகளில் விற்பனை செய்யும் இனிப்புகளின் விலையை காட்டிலும், ஆவினில் விலை குறைவு என்பதால் மக்கள் விரும்பும் உணவாக ஆவின் மாறியுள்ளது.

இனிப்புடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்..

மாலை முரசு செய்திகளுக்காக செய்தியாளர் நந்தினி..

மேலும் படிக்க | மெரினாவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிப்பு....

--- பூஜா ராமகிருஷ்ணன்