பத்திரிக்கையாளர்களுடன் காயத்ரி ரகுராம் வாக்குவாதம்...பாதியில் முடிந்த செய்தியாளர்கள் சந்திப்பு!

பத்திரிக்கையாளர்களுடன் காயத்ரி ரகுராம் வாக்குவாதம்...பாதியில் முடிந்த செய்தியாளர்கள் சந்திப்பு!

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களுடன் நடிகை காயத்ரி ரகுராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காயத்ரி ரகுராம்:

பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க: "பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசுவது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

அப்போது பேசிய அவர், இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள் தான், அவர்கள் என்ன தூய தமிழை தான் பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்களா? என்று கூறினார். தொடர்ந்து, தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன பண்ணீங்கனு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் அருகில் இருந்தவர் அது பற்றிய தகவல்களை அளித்தார்.

அதேபோல், 1998 குண்டுவெடிப்பு தொடர்பான புகைப்படத்தை கம்பேர் செய்து கோவை வெடி விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் கூறாமல் ஆத்திரம் அடைந்தார். இதுபோன்று செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறிய காயத்ரிக்கு அருகில் இருந்தவர்கள் அவருக்கு பதில் சொல்லிக் கொடுக்க அதனை பத்திரிக்கையாளர்களிடம் கூறிய அவர், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.