"பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசுவது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

"பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசுவது தரம் தாழ்ந்த செயல்" அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!

பத்திரிகையாளர்களை இழிவு படுத்தி பேசுவது, அவர்களின் தரத்தை, அவர்களே தாழ்த்திக் கொள்ளும் செயல் என்று, அண்ணாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதனை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  

இதையும் படிக்க: கோவை வழக்கில் திடீர் திருப்பம்...6 வது நபர் அதிரடி கைது...நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பத்திரிகையாளர்களை இழிவுப் படுத்தி பேசுவது மற்றும் தரம் தாழ்த்தி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், இப்படி பேசுபவர்கள் அவர்களின் தரத்தை, அவர்களே தாழ்த்திக் கொள்ளும் செயலாகும் என்று பத்திரிக்கையாளர்களை அவதூராக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு எம்பி கனிமொழி தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.