வெவ்வேறு மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெவ்வேறு மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்...

புதுக்கோட்டை | அறந்தாங்கி அடுத்த பாக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துபிடாரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் படிக்க | வெகு விமர்சையாக நடந்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்...

திருவள்ளூர் | சதுரங்கப் பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கோபுரம் புதிதாக கட்டப்பட்டதை அடுத்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் 2 கால பூஜைகள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா...!

மயிலாடுதுறை | மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஒன்றாம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவில் யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றதை அடுத்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் மேள தாளங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் படிக்க | பழனியில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை... வருவாய் என்ன?!

ராணிப்பேட்டை | பனப்பாக்கம் ஸ்ரீமயூர நாதர் கோயிலில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்து பழமையான கோயிலான அருள்மிகு சவுந்தரிநாயகி உடனுறை ஸ்ரீ மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கும்பாபி ஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | வெகு விமரிசையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...